இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் அவசியம் என்பதை உணர்த்தும் விபத்துகள்

போளூர் அருகே இன்று மதியம் நடந்த விபத்தில் பள்ளிமாணவன் இறந்த சம்பவம்

போளூர்அடுத்த மட்டப்பிரையூரில்  அரசு பஸ் மோதி இருசக்கரத்தில் வந்த பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

போளூர் அடுத்த மட்டப்பிரையூரை சேர்ந்தவர் சக்திவேல்.(26).இவருக்கு வரும் 26 ம் தேதி திருமணம். அதற்காக பத்திரிகை தருவதற்காக தனது ஊரிலிருந்து பக்கத்து வீட்டில் குடியிருக்கும் காண்டிபன் மகன் பரத் (15) ஐ அழைத்துக்கொண்டு இரு சக்கர வாகனத்தில் போளூர் வந்தார். மாட்டப்பிரையூர் கூடுரோடில் இருந்து பிரதான சாலையான் சேத்துப்பட்டு போளூர் ரோடில் திரும்பும் போது சென்னையில் இருந்து போளூர் வந்து கொண்டிருந்த அரசு பஸ் திடீரென மோதியது.

வண்டியில் இருந்து இருவரும் தூக்கிஏறிய  பட்டனர். பரத்திற்கு தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சக்திவேலிற்கு கால் எலும்பு முறிந்ததால், போளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

இது குறித்த புகாரின் பேரில் போளூர் இன்ஸ்பெக்டர் கண்ணையன் வழக்கு பதிவு செய்து விசாராணை செய்து வருகிறார்.இறந்து போன பரத் ,ஆரணியில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் எவ்வளவு அவசியம் என்பதை ஒவ்வொரு விபத்தும் பொதுமக்களுக்கு  உணர்த்தி கொண்டேதான் உள்ளது

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth