நெல்லை மாவட்டத்தில் கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் பிளாட் எண் B-65 முதல் B-76 வரையிலும் சர்வே எண்: 1641pt, 1903pt , 1904pt (கங்கைகொண்டான் கிராமத்தில்)-இல்,

நன்றி : கீற்று ( முழுதாக படிக்கவும்)

நெல்லை மாவட்டத்தில்
கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் பிளாட் எண் B-65 முதல் B-76 வரையிலும் சர்வே எண்: 1641pt,
1903pt , 1904pt (கங்கைகொண்டான்
கிராமத்தில்)-இல், 36.00 ஏக்கர் பரப்பளவில், தாமிரபரணி ஆற்றில் இருந்து தினமும் 15 லட்சம் லிட்டர் நீரையெடுத்து அமெரிக்காவின் பெப்சி
நிறுவனத்திற்கு தண்ணீர் மற்றும்
குளிர்பானங்கள் தயாரிக்க 20-01-2014 இல் பெப்சி அனுமதி கேட்டது. இதற்கு
பதினைந்தே நாளில் தமிழக அரசு ஓடி
வந்து 05-02-2014 அன்று அமெரிக்காவின் பெப்சி நிறுவனத்திற்கு அனுமதி அளித்து, 99 ஆண்டுகளுக்கு 36 ஏக்கர் நிலம் ஒதுக்கி ஒப்பந்தம் போட்டுள்ளது.

தற்போது பெப்சி நிறுவனம் அங்கு
கட்டிட வேலைகளை வேகமாக செய்து
வருகிறது. கேரளா உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் பெப்சி நிறுவனத்தைத் துவக்க கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. தமிழகத்திற்குள் வந்த இவர்கள் ஆரம்பத்தில் நெல்லை
மாவட்டம் நாங்குநேரி சிறப்பு
பொருளாதார மண்டலத்தில் நிலம்
கேட்டார்கள். ஆனால் அங்கு மக்களின்
எதிர்ப்பு காரணமாக அந்த திட்டத்தைக்
கைவிட்டனர். தற்போது சத்தமில்லாமல்
கங்கைகொண்டானில் 36 ஏக்கர் நிலத்தை வாங்கி பூமிபூஜை போட்டு
வேலைகளை வேகமாக செய்து
வருகின்றனர்.

அரசு மதிப்பீட்டில் சிப்காட் வளாகத்தில்
உள்ள 36 ஏக்கர் நிலம் ரூ.5,40,00,000/-
(ஐந்து கோடியே நாற்பது இலட்சம்) என
சொல்கிறது. ஆனால் சந்தை மதிப்பில்
இந்த 36 ஏக்கர் நிலம் ரூ.15,00,00,000/-
(பதினைந்து கோடி) விலை
போகிறது. பல கோடி மதிப்புள்ள இந்த
நிலத்திற்கு அமெரிக்கா பெப்சி
குளிர்பான நிறுவனம் ஏக்கர் ஒன்றுக்கு
ரூ1.00 (ஒன்று) வீதம் ஆண்டுக்கு ரூ.36/
=- (முப்பத்தி ஆறு ரூபாய் அரசுக்கு)
என நிலத்திற்காக 98 ஆண்டுகள் குத்தகை செலுத்த வேண்டும் என்றும், 99ஆம் ஆண்டில் ஏக்கர் ஒன்றுக்கு ரூ2.00 (இரண்டு) வீதம் ஆண்டுக்கு 72/=
(எழுபத்தி இரண்டு ரூபாய்) குத்தகை 36
ஏக்கருக்கு செலுத்த வேண்டும் என
பெப்சி நிறுவனத்துடன் தமிழக அரசு
'மாபெரும்' ஒப்பந்தம் போட்டுள்ளது.
பதினைந்து கோடி ருபாய் சந்தை
மதிப்புள்ள நிலத்திற்கு 100
ஆண்டுகளுக்கு சேர்ந்து அமெரிக்கா
பெப்சி நிறுவனம் செலுத்தும்
குத்தகைத் தொகை என்பது வெறும்
ரூ.3600/=(மூவாயிரத்து அறுநூறு
மட்டும்) மட்டுமே ஆகும்.

தாமிரபரணி ஆற்றில் இருந்து சுமார் 20
கி.மீ. தூரத்திற்கு பல்வேறு நீரேற்றும்
பம்புகள் மூலம்கொண்டு வரப்படும்
தண்ணீர், நெல்லை கங்கைகொண்டான்
சிப்காட் வளாகத்தில் அமையும் பெப்சி
குளிர்பான ஆலைக்கு வழங்கப்படும்.
தினமும் 15 லட்சம் லிட்டர் வரை தண்ணீர் வழங்க அரசுடன் ஒப்பந்தம்
போடப்பட்டுள்ளது. இது படிப்படியாக
ஒரு கோடி லிட்டர் வரை கூட
அதிகரிக்கும் நிலை உள்ளது.

இதனால் வாரம் ஒரு நாள் மட்டுமே குடிதண்ணீர் பெற்று வரும் திருநெல்வேலி,
பாளையங்கோட்டை, மேலப்பாளையம்
உட்பட மாநகராட்சிப் பகுதிகளும்,
தாமிரபரணி ஆற்றின் மூலம்
சுற்றியுள்ள பல்வேறு
கிராமங்களுக்கு கிடைத்து வரும்
குடிநீரும், பல்வேறு கூட்டு குடிநீர்
திட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட
உள்ளது.

பெப்சி குளிர்பான நிறுவனத்திற்கு 1000 லிட்டர் நீர் ரூ.37/= ரூபாய்க்கு அரசால் வழங்கப்பட ஒப்பந்தம்
போடப்பட்டு உள்ளது. இவர்கள் ஒரு
லிட்டர் அக்வாபினா குடிநீர் பாட்டிலை
ரூ.20/= ரூபாய்க்கு விற்பனை செய்ய
உள்ளனர். ஒரு லிட்டர் குளிர்பானம்
ரூ.60/= ரூபாய்க்கு விற்பனை செய்ய
உள்ளனர்.

வரையறை அற்ற இந்த நீர்வளக்
கொள்ளையால் தாமிரபரணி மூலம்
நெல்லை-தூத்துக்குடியில்
விவசாயம் நடந்து வரும் 86,000 ஏக்கர்
விவசாய நிலமும் கடுமையாக
பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
ஏற்கனவே தாமிரபரணி ஆற்றில் நடக்கும் மணல்கொள்ளையால் நீர்பிடிப்பு பகுதிகள் குறைந்து போய் வருகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து போன நிலையில் பெப்சி போன்ற நிறுவனங்கள் தொடர்ந்து ஆற்று நீரை தினமும் பல லட்சம் உறிஞ்சினால் தாமிரபரணியை நம்பி வாழும் விவசாயிகளின் எதிர்காலம் அழிந்தே போய் விடும்.

( நம் மக்களை காக்க , கத்தியில் வீரவசனம் பேசிய விஜயோ , சிம்பிளிசிட்டி அஜித்தோ , தலைவரோ , ஆண்டவரோ... யாரும் வர மாட்டார்கள்.. நம்மாள் முடிந்த அளவு இணையத்தில் இந்த செய்தியை பரப்புவோம்.. இன்னும் ஒருபடி மேலே , களத்திற்க்கு சென்று போராடலாம் )

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth