வெள்ளத்தில் சென்னை வெள்ளம் வடியாதென்பது வல்லவன் வகுத்தடா

வெள்ளத்தில் சென்னை வெள்ளம்
வடியாதென்பது வல்லவன் வகுத்தடா - வர்ணா
எம்மிடம் அருள் செய்யடா...

குடியேற இடம்தேடி
கூடாத செயல்செய்து
ஏரிகள் தூர்த்தோமடா – வர்ணா
இயற்கையிடம் தோற்றோமடா...

கால்வாய்க்கு வழியில்லை
நீர்போகப் பாதையில்லை
வீடுகள் மிதக்குதடா – நீயும்
தண்டித்தல் அறமல்லடா...

மழைவெள்ளம் வடியாமல்
மனம்நொந்த மக்களுக்கு
தாயுள்ளம் காட்டிடடா - வர்ணா
ரேஷனில் மழைபெய்யடா...

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth