15 இளைஞர்கள் உருவாக்கிய 'கன்ட்ரோல் ரூம்'

15 இளைஞர்கள் உருவாக்கிய 'கன்ட்ரோல் ரூம்'

சென்னையில் வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு உதவ, 15 இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து, தனி கட்டுப்பாட்டு அறையை உருவாக்கியுள்ளனர்.

அவர்கள், அரசு அதிகாரிகளுடன் கைகோர்த்து, ஏராளமானோருக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.
சென்னையில் வெள்ளத்தில் சிக்கி, லட்சக்கணக்கான குடும்பங்கள் தவித்து வருகின்றன.
அவர்களுக்கு உதவ பலர் தயாராக இருந்தும், அவர்களை எப்படி தொடர்பு கொள்வது என்பது தெரியாமல் இருந்தனர்.இரு தரப்பினரை இணைப்பதற்காக, சென்னையில் சில மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து, ஒரு சிறிய அறையில், இன்டர்நெட் வசதியுடன் கூடிய, 10 லேப்டாப்கள், 'லேண்ட் லைன்' மற்றும் மொபைல்போன்கள் உதவியுடன், 24 மணிநேர கட்டுப்பாடு அறையை அமைத்துள்ளனர்.

உதவி தேவைப்படுவோரையும், உதவ விரும்புவோரையும் இணைத்து உதவிபுரிந்து வருகின்றனர். அவர்கள், மணிவண்ணன், அலெக்ஸ் பால் மேனன் ஆகிய ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மற்றும் ஐ.ஆர்.எஸ்., அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.

'வாட்ஸ் ஆப்' எண் - 98806 55555, 'டெலிகிராம்' எண் - 72597 60333 மற்றும் 12 இணைப்புகள் கொண்ட, 080400 01000 என்ற தொலைபேசி எண் ஆகியவற்றில் தங்களை தொடர்பு கொள்ளலாம்' என, கேட்டுக் கொண்டு உள்ளனர்.
Murali Malai Murasu's photo.

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth