தென்னக ரயில்வேயில் 976 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தென்னக ரயில்வேயில் 976 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
இந்திய ரயில்வேயின் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தென்னக ரயில்வேயில் Goods Guard, Clerk, Typist,Station Master போன்ற தொழில்நுட்பம் அல்லாத 976 பணியிடங்களுக்கான அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வாணையம் 2016 வெளியிட்டுள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Commercial Apprentice
காலியிடங்கள்: 105
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200

பணி: Traffic Apprentice
காலியிடங்கள்: 127 சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200

பணி: Goods Guard
காலியிடங்கள்: 182 சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800

பணி: Junior Accounts Assistant-Cum-Typist
காலியிடங்கள்: 93
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800
பணி: Senior Clerk-Cum-Typist
காலியிடங்கள்: 76
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800
பணி: Asst Station Master காலியிடங்கள்: 393
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800
வயதுவரம்பு: 18 - 32க்குள் இருக்க வேண்டும்.

அனைத்து இடஒதுக்கீடு பிரிவினருக்கு அரசுவிதிகளின்படி வயதுவரம்பு சலுகையில் தளர்வு வழங்கப்படும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். (விரிவான விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையத்தளத்தை பார்க்கவும்)
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:
பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக்கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:
http://www.indianrailways.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth