அங்கிள் ஆகிவிட்டோம் என்பதற்கான அறிகுறிகள்

அங்கிள் ஆகிவிட்டோம் என்பதற்கான அறிகுறிகள்

விசேஷங்களில் அழகான இளம் பெண்களைக் கண்டால் அடடா அவசரப்பட்டுட்டோமே என்று நினைப்பது போய் சித்தி பையன் சிவாவுக்கு இந்தப் பொண்ண கேக்கலாமே எனத் தோன்றும்.

நட்பு, உறவுகளில் சம வயதினர் அமெரிக்கா வேலை, அரசு வேலை என செட்டில் ஆனால் பொறாமைப்படுவது நின்று நம்ம பையனுக்கு பின்னாடி பிரச்சினையில்லை, ரெக்கமண்டேசன் பண்ண ஆளிருக்கு என மனது சாந்தப்படும்.

திரைப்படங்களின் முதல் நாள் முதல் காட்சி என்பது ஞாயிறு மாலைக்காட்சி என மனதில் பதிந்திருக்கும்.
மியூசிக் சேனல் பார்ப்பது குறைந்து செய்தி சேனல் பார்ப்பது அதிகரிக்கும்.

ஞாயிற்றுக்கிழமை யார் வற்புறுத்தலும் இன்றி காலையில் கறிக்கடைக்கு கிளம்ப வைக்கும். அதற்கு முன் கண் அனிச்சையாக இன்னிக்கு அமாவாசை,ஏகாதசி, சஷ்டின்னு ஏதாச்சும் இருக்கான்னு பார்க்கவைக்கும்.

ஒரு மருந்துக்கடைக்காரர், ஒரு சிறு உணவக முதலாளியின் நட்பு நிச்சயம் ஏற்பட்டிருக்கும்.

கவலையை மறக்க குடியை விட காமெடி சானல் பார்ப்பது சிறந்த சாய்ஸ் எனத்தோன்றும்.

வண்ணத்திரை, சினிக்கூத்து வாங்கிய கடைக
ளில் சக்தி விகடனும், நாணயம் விகடனும் வாங்கவைக்கும்.

பல் விளக்க, சேவிங் செய்ய, குளிக்க வழக்கத்தை விட அதிக நேரம் ஆகும்.

பிள்ளைகளின் ஆசை, சோம்பல் மீதான கோபம் வடிந்து இப்போ அனுபவிக்காட்டி எப்போ, போய்ட்டு போகுது என்ற எண்ணம் வரும்.

அலுவலகத்தில் சனி,ஞாயிறு அன்று நண்பர்கள் ஏதாவது அவுட்டிங் பிளான் செய்தால் தகுந்த காரணமின்றி ஜகா வாங்க வைக்கும்.

பேருந்து வழக்கமாக வரும் நேரத்திற்கு ஒரு நிமிடம் தாமதமாய் போய் ஓடிச்சென்று ஏறுவது நின்று, ஐந்து நிமிடம் முன்னரே பஸ்ஸ்டாண்டில் காக்க வைக்கும்.

என்னால் எல்லாம் முடியும், யார் தயவும்
தேவையில்லை என்ற எண்ணம் போய், உலக மக்கள் அனைவரின் கூட்டு உழைப்பால் தான் நமக்கு இந்த வாழ்க்கை சாத்தியமாயிற்று என்ற எண்ணம் வரும்.

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth