சென்னை ஒரு வினோதமான சிட்டி பாஸ். இங்கேதான் பல ஆச்சர்யங்கள் அன் லிமிடேடாக கண்களுக்கு தெரிகின்றன. இதோ

சென்னை ஒரு வினோதமான சிட்டி பாஸ். இங்கேதான் பல ஆச்சர்யங்கள் அன் லிமிடேடாக கண்களுக்கு தெரிகின்றன. இதோ
 • சப் வே என்றால் சுரங்கப்பாதை. ஆனால் சப் வே ரெஸ்டாரன்ட்டுகள் பெரும்பாலும் மாடியில் தான் இருக்கின்றன.
 • லேக் ஏரியா என்றொரு ஏரியாவில் லேக்கையே பார்த்ததில்லை. இப்போது எல்லா அப்பார்ட்மெண்ட்களும் லேக் வியூ அப்பார்ட்மெண்ட்க்களாக  மாறிக் கிடக்கின்றன.
 • ஐஸ் ஹௌசில் பெரும்பாலும் வெயில் சுள்ளுன்னு அடிக்கும்
 • ஆயிரம் விளக்கை இதுவரை யாரும் எண்ணி பார்த்ததில்லை.
 • பீச் ஸ்டேஷனில் இறங்கி பீச்சை தேடினால் பீச் கிடைக்காது. பீச்சாங்கை பக்கம் திரும்பி பஸ் பிடிச்சி போகணும்.
 • மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு போக மீனம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் ல இறங்கக் கூடாது திரிசூலம் ஸ்டேஷன் ல தான் இறங்கனும்.
 • பறக்கும் ரயில் பறக்கும்னு தப்பா நினைக்கக்கூடாது.
 • திடீர்குப்பம்லாம்ரொம்ப நாளாவே இருக்கு பாஸ்.
 • பாண்டிச்சேரி கெஸ்ட் ஹவுஸ் கே கே நகர்ல இருக்கு.
 • புதுப்பேட்டையில் பழைய காயிலான் கடைகள்தான் நிறைய இருக்கு.
 • யானைக்கவுனியில் யானைய பாக்க முடியாது.
 • சூளைமேடு மத்த ஏரியா வை விட தாழ்வா தான் இருக்கு.
 • கிரீன் வேஸ் சாலை பச்சை பசேல்னு இருக்குனு நினைக்ககூடாது.
 • மண்ணடி ஏரியா  மண்ணுக்கு மேல தான் இருக்கு.
 • கடைசியா பெருங்குடியில டாஸ்மாக் நிறைய இருக்குனு தப்புக்கணக்கு போடக்கூடாது.
 •   

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth