வதந்திகளை நம்ப வேண்டாம். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வேண்டுகோள் விளக்கம்

வதந்திகளை நம்ப வேண்டாம். ...
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வேண்டுகோள் & விளக்கம்

தற்போது இரண்டு செய்திகள் வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைத்தளங்களில் படிப்போர் மனதில் பீதியை ஏற்படுத்தும் விதமாக பரவிக் கொண்டிருகிறது. 

முதலாவதாக. .
சென்னையில் பெய்து வருவது வெறும் மழை அல்ல..
NASA ரிப்போர்ட் படி இதோட பெயர் "EL Nino" சுழற்சி புயல்..
கிட்ட தட்ட 250 Cm வரைக்கும் இந்த மழைபெய்ய வாய்ப்பு உண்டு..
சென்னையே முழுகிப்போக வாய்ப்பு உண்டு..
google ல Search பண்ணி பாருங்க தெரியும்..
எப்படியாவது நம் சென்னை மக்களுக்கு தெரியபடுத்துங்க...
PLZ,,,, அரசாங்கம் இத பொருட்டா எடுத்துக்கல... என்பது முதலாவது வதந்தி. ..

உண்மையில். ..
எல் நினோ என்பது தென் அமெரிக்கா பசுபிக் கடற்பகுதியில்
ஏற்படும் வானிலை மாற்றம்..
பசுபிக் கடல் சற்றே சூடு அதிகமாகி
அதன் காரணமாக தென் அமெரிக்கா, கலிபோர்னியா
முதலிய இடங்களில் மழை பொழிவு ஏற்படும்.

எல் நினோ உலக வானிலையில் தாக்கம் ஏற்படுத்தும் என்பதால் செயற்கை கோள்வழி அதனை கண்காணிக்க நாசா ஏற்பாடு செய்துள்ளது.

எல் நினோ தீவிரம் அடையும் ஆண்டுகளில்
வங்காள விரிகுடாவின் கடல் நீர் வெப்பம் சற்றே உயரும்.
அதன் காரணமாக கூடுதல் நீராவி உயர்ந்து மழை கூடுதலாகும்.

1997 இல் உருவான தீவிர எல் நினோ போல இந்த ஆண்டும் தீவிரம் அடைந்து வருகிறது என நாசா வானிலை செயற்கை கோள்கள் கண்டுள்ளன.

இந்த ஆண்டும் இதன் தொடர்ச்சியாக  1997போல அமெரிக்கா பகுதிகளில் பெரு மழை பொழியும் என்றும்
வரும் 2016ஆம் ஆண்டு  சராசரி வெப்பம் கூடுதல் கொண்ட ஆண்டாக இருக்கும் எனவும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

எல் நினோ ஒரு புயல் அல்ல;
சென்னையை நோக்கி வராது;
சென்னை அல்லது தமிழகம் குறித்து நாசா எந்த ஒரு முன்னறிவிப்பையும் வெளியிடவில்லை.

இரண்டாவதாக. ...
<<டிசம்பர் 16 முதல் 22 வரை சூரிய புயலால் நாம் சூரியனை பார்ப்பது கடினம்... பூமி இருளில் முழ்கும் #நாசா>>

Huzlers.com எனும் வலைத்தளம் விஷமத்தனமாக
வேடிக்கை காட்ட பரப்பிய இந்த போலி செய்தி
காட்டு தீ போல பரவி உலகெங்கும் பீதியை கிளப்பி வருகிறது. உண்மை காலில் செருப்பு போடுவதற்குள்
பொய் ஒருமுறை உலகை சுற்றி வந்துவிடும்
எனபதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

உண்மையில். ..
சூரிய (காந்த) புயல் அவ்வப்போது ஏற்படும் என்பது மெய் தான்.
இந்த காந்த புயல் பூமியை வந்து "மோதும்"போது விண்வெளியில் சுற்றும் செயற்கை கோள்களின் தகவல் தொடர்பு முதலிய பாதிக்கப்படும்.

மிக தீவிர காந்த புயல் வீசினால் ஐரோப்பா முதலிய பகுதிகளில்
குறிப்பாக
துருவத்துக்கு அருகில் உள்ள பகுதிகளில் மின்தொகுப்பு கருவிகள் - ட்ரான்ஸ்பார்மர்கள் - செயலிழந்து ஐரோப்பிய நகரங்கள்
"இருளில் மூழ்கலாம்" அவ்வளவு தான்.

மின்சாரம் தடை பட மின்விளக்குகள் எரியாது.
அவ்வளவு தான்.
இது தான் "உலகமே இருன்று விடும்" என்ற சொல்லின் மெய் அர்த்தம்.
மெய்யாக உலகமே பல நாட்கள் இருண்டு விடாது.
போலி செய்தி தான் இது.
Share with Society Care. By (Blood Sam)

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth