மனமே அழுத்தம் கொள்ளாதே.. அமைதி கொள்-து.ராமராஜ்
🌺🌺🌺மனமே அழுத்தம் கொள்ளாதே..
அமைதி கொள்-து.ராமராஜ்
🌺இப்போது அமெரிக்காவில் மிகவும் பிரபலமாக விளங்கும் இரண்டு வார்த்தைகள் stress Management. நிர்வாகம் பற்றி பேசும் எல்லா இடங்களிலும், மன அழுத்தத்தை எப்படிக் கையாள்வது என்பது பற்றி சொல்லித் தர, மனவியல் நிபுணர்கள் தலையெடுத்துவிட்டார்கள்.
🌺உங்கள் தொழிலை, குடும்பத்தை, செல்வத்தையெல்லாம் நிர்வகிப்பது எப்படி என்று கற்றுக்கொள்ள விரும்புவதில் அர்த்தம் இருக்கிறது. மன அழுத்தம் என்பது விட்டுத் தொலைக்க வேண்டிய விஷயம் அல்லவா? அதைக் கூடவே வைத்துக் கொண்டு நிர்வகிப்பது எப்படி என்று எதற்காகக் கற்றுக் கொள்ள வேண்டும்?
🌺வளர்ச்சி… பணம்… நவீன வாழ்க்கையில் மன அழுத்தம் என்பது தவிர்க்கவே முடியாதது என்றாகிவிட்டது. காரணம், வளர்ச்சி என்றாலே அதிக செல்வம் என்று நினைத்துவிட்டதால் வந்த குழப்பம் இது. வாழ்வின் மற்ற பல முக்கிய அம்சங்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு, பணமே மனிதனை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டதால் ஏற்பட்ட ஆபத்து இது.
🌺 நிர்வாகம் என்றாலே, அதைப் பொருளாதாரத்துடன் தொடர்புபடுத்தும் அவலத்தால் வந்த நிலை இது. யார் சிறந்த நிர்வாகியாக இருக்க முடியும்? ஒரு வாகனத்தை ஓட்டுவது எப்படி என்று முதலில் உங்களுக்குத் தெரிந்திருந்தால்தானே, அதை நீங்கள் அடுத்தவருக்குச் சொல்லித் தர முடியும்?
🌺யாரை நிர்வகிக்க வேண்டும்? மற்றவர்களை நிர்வகிக்கும் திறனை நீங்கள் முழுமையாகப் பெற வேண்டுமென்றால், அடிப்படையில் உங்களை அல்லவா முதலில் நிர்வகிக்கத் தெரிந்திருக்க வேண்டும்? உங்கள் உடலை, மனதை, உணர்ச்சிகளை எல்லாம் திறமையாகக் கையாளக் கற்றுக் கொண்ட பின்தானே, நீங்கள் மற்றவர்களை நிர்வகிக்க முனையலாம்?
🌺 ஓய்வாக இருந்தபோது, வேலை கிடைக்காதா என்று ஏங்கினீர்கள். கிடைத்தவுடன் சந்தோஷத்தையெல்லாம் இழந்து, படபடப்புடன் ரத்த அழுத்த நோயை வரவழைத்துக் கொள்கிறீர்கள்! பதவி உயர்வு கிடைக்கும்வரை, அதற்காகப் போராடினீர்கள். இப்போது நிமிடத்துக்கு நிமிடம் டென்ஷன் என்கிறீர்கள். இன்னும் உயரத்துக்குப் போனால், என்ன சொல்வீர்களோ? ‘முன்னால் நிம்மதியாக இருந்தேன். இப்போது அமைதியே போயிற்று’ என்பீர்களா?
🌺👉வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு வசதிகளைப் பெருக்கிக் கொள்வது, செத்த கிளிக்குத் தங்கக் கூண்டு செய்து கொடுப்பது போல!👈 தோல்வியால் உண்டான துன்பத்துக்காவது அர்த்தம் கற்பிக்கலாம். ஆனால், வெற்றி என்பது நீங்கள் வியர்வை சிந்தி, கடுமையாகப் போராடி உங்களால் எவ்வளவு கடினமாக ஈட்டப்பட்டது? அந்த வெற்றியாலும் துன்பம் வந்தால், உங்கள் அடிப்படையிலேயே தவறு இருக்கிறதே!
🌺உங்களால் கையாள முடியாததை எதற்காக விரும்பினீர்கள்? நீங்கள் கடைநிலைத் தொழிலாளியானால் என்ன, கட்டுப்படுத்தும் முதலாளியானால் என்ன? உங்களை நிர்வகித்துக் கொள்ளும் முழுமையான திறனின்றி, நீங்கள் மேல்நிலைக்கு வர முனைந்தால், அது ஒரு விபத்தாகவே முடியும். வெளிச் சூழ்நிலைகளால் பாதிக்கப்படாமல், உங்கள் உள்தன்மையை நிர்வகிக்க முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.
🌺 சுற்றியிருப்பது சகதியாக இருந்தாலும் அதையே தன் உரமாகக் கொண்டு, தாமரை தன் பூரண அழகை வெளிப்படுத்துகிறது அல்லவா! நறுமணத்தை பரப்புகிறது அல்லவா? உங்கள் வாழ்க்கையும் அப்படித்தான் அமைய வேண்டும். சுற்றுப்புறம் எப்படி இருந்தாலும், உறுதியோடு செயல்பட்டு, அதிலிருந்து உங்களுக்கான உரத்தை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.
🌺மன அழுத்தம் இல்லாமல், உங்களை ஆனந்தமாக நிர்வகிக்கக் கற்றுக் கொண்டுவிட்டால், நம்ப முடியாதவற்றைக் கூட நிகழ்த்திக் காட்டலாம்.
💐அமைதி கொள் மனமே
💐அமைதி கொள் மனமே அமைதி கொள்...
💐ஆத்திரம் உன்னை சூழ்ந்து விட்டாலும்
அநியாயம் மொத்தமும் தாக்கினாலும்
அதர்மம் உன்மேல் அனுகிரகம் கொண்டாலும்
சினம் காட்டாமல் அமைதி கொள்...
💐தோல்வி உன்னை துரத்தி அடித்தாலும்
கஷ்டம் நெஞ்சை காயப்படுத்தினாலும்
துன்பம் தலை மேல் ஏறி அமர்ந்தாலும்
விரக்தி அடையாமல் அமைதி கொள்...
💐ஊர்மக்கள் உன்னை தாழ்த்தினாலும்
உலகே சேர்ந்து இகழ்தினாலும்
கோபம் உனக்குள் அளவு கடந்தாலும்
பொறுமை இழக்காமல் அமைதி கொள்...
💐தேய்ந்து வளரும் நிலவைப்போல
பூத்து உதிரும் மலரைப்போல
என்றும் எதிலும் அமைதி கொள்...
சிரித்தே கொஞ்சம் அமைதி கொள்...
💐நிலவாய் மலராய் பிறக்கவில்லை
இந்த அமைதியை எளிதாய் பெற்றிருக்க
நாம் மானிட ஜாதியில் பிறந்து விட்டோம்
மன அமைதியை மனதுக்குள் புதைத்து விட்டோம்
💐இது இயற்கையின் சதியா தெரியவில்லை
ஆண்டவன் விதியா புரியவில்லை
அட இப்படியே நாம் பழகி விட்டோம்
இதை உணராமல் மெல்ல வளர்ந்து விட்டோம்
💐கண்டும் காணாமல் விட்டு விட
ஒரு பகுத்தறிவு இங்கு தேவையில்லை
இதை ஓரிரு நாட்களில் கொண்டு வர
இங்கு மாத்திரை மருந்தென்று ஏதும் இல்லை
💐ஒரு மாற்றம் கண்டிட உழைத்திடுவோம்
நம் பழக்கத்தில் அமைதியை புகுத்திடுவோம்
மன அமைதியில் உலகை வென்றிடுவோம்...
💐எங்கும் எதிலும் உன் உழைப்பால் மன அமைதியால் வெற்றி கொள்
வெற்றி பெற்ற பின்னரும் அமைதி கொள் மனமே...
---து.ராமராஜ்
மாவட்ட பொருளாளர்
த.தொ.ஆ.கூட்டணி
நாமக்கல் மாவட்டம்🌺💐👍
Comments