ஒரு ஏழை வாலிபன் ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண்ணை

ஒரு ஏழை வாலிபன் ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண்ணை வெகு நாட்களாக பின் தொடர்ந்து வருகிறான். இரவு Office முடிந்து அவள் தனியாகதான் வீடு செல்வாள் இவனும் அவள் பின்னாலே சத்தமில்லாமல் வீடுவரை நடந்துவருவான். முதலில் அவள் பயந்தாலும் பிறகு இவன் எந்த ஒரு தொந்தரவு செய்யாமலிருப்பதால் பயமில்லாமல் "வந்தால் வரட்டுமே" என்று இப்படியே 2 மாதங்கள் போனது.

பேருந்து நிலையத்தில் அவனுக்காக காத்திருப்பாள். அவன் வந்த பிறகுதான் இவள் முன்னே நடப்பாள் அவன் பின்னே வருவான். சிறிது தூரம் நடந்துக்கொண்டே யோசிக்கிறாள். "இவன் எதற்காக என் பின்னாள் வரவேண்டும்! யாரு இவன். என்னை காதலிக்கிறானா! அல்லது என்னை அடைய நினைக்கிறானா! சீ சீ அவனை பார்த்தால் அப்படி தெரியவில்லை பிறகு ஏன் என் பின்னால் வரவேண்டும்!... என்று யோசித்துக்கொண்டே சடார் என்று அவனை திரும்பிப் பார்க்கிறாள்.

(Girl)"என்னை காதலிக்கிறாயா? (Boy) இல்லை. (G) பிறகு ஏன் என் பின்னாலே வரவேண்டும்!!! (B) என் வீடு இங்குதான் இருக்கிறது... என்று அவன் சொல்ல. மிகவும் குழம்பிபோனவள் வீடு வருகிறாள். தன் தந்தையிடம் அவனை பற்றி கேட்க. அவன் என்னிடம் அனுமதி வாங்கிக்கொண்டு தான் உன்னை பார்க்க வருகிறான். நீ பயப்படாதே அவன் உன்னை எந்த தொந்தரவும் செய்யமாட்டான். என்று தந்தை சொல்கிறார். என்னப்பா இது!!! ஏன் இப்படி??? என்று அவள் கேட்க.

உனக்கு இருதய புற்றுநோய் இருந்ததே ஞாபகம் இருக்கிறதா! அவன் தாயார் தான் இறந்த பிறகு அவர் இதயத்தை உனக்கு தானமாக கொடுத்தார் என்று தந்தை சொல்ல இதை கேட்டவள் அதிர்ந்துபோய்விடுகிறாள். அவன் மீது ஒரு இறக்கம் வந்தது. இறக்கம் நட்பாக மாறியது. நட்பு 1 வருடத்தில் காதலாக மாறிவிட்டது.

இருவருக்கும் பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணமும் நடந்து 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. அந்த குழந்தைக்கு தன் தாயாருடைய பெயரை வைத்து "வாங்கம்மா"! "சாப்பிடுங்கம்மா"! என்று செல்லமாகவும் மறியாதையாகம் கொஞ்சுவான். தன் தாயாரின் நினைவு தினம் அன்று இரவு அம்மாவின் கல்லறைக்கு சென்றுவிட்டு வீடுவருகிறான்.

அப்போது அந்த 2 வயது குழந்தை தூக்கத்தில் தேன் சிந்தும் குரலில் "எங்கப்பா போய்டு வர" விசப் பணி பேய்கிறதல்லவா!" சீக்கிரம் வீடு வரக்கூடாதா"! என்று சொல்கிறது. அந்த குழந்தையின் குறல் தன் தாயாரின் குறல் போல் இருக்கு 2 வயது குழந்தை எப்படி பேசமுடியும் என்று உறைந்துப்பார்க்கிறான். அந்த குழந்தை மறுபடியும் தூக்கத்தில் உலறியது

"சாப்டியாப்பா"! நான் வேண்டா ஊட்டிவிடவா"!!!

இதை கேட்டவன் "அம்மா" என்று அலறி தன் குழந்தையை மார்போடு அனைத்துக்கொண்டு "என்ன பெத்த ஆத்தா! அம்மா" அம்மா" அம்மா!!! கதறி அழுகிறான். கனவனின் தாய் பாசத்தை பார்த்த அவன் மனைவியும் அழுகிறாள்.

நாம் எப்படி இருந்தாலும் நம்மை நேசிக்கும் ஒரே ஜீவன் நம் தாயார் மட்டும்தான் .   KING 👑

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth