🌺💐⚪🌙 என் நிலா
🌺⚪🌙உன்னை வர்ணிக்க நீண்ட நாட்களாய் வார்த்தைகளை தேடுகிறேன்
🌺⚪🌙இதோ இன்று சிரமமே இன்றி கோர்வைகளாய் வந்து விழுகின்றன
🌺⚪🌙என் நண்பர்களின் மனதை உன் நிறமாக்கிக் கிடக்கிறாய்
🌺⚪🌙என் தந்தையின் நாணயத்தை உன் வடிவாக்கிக் கொள்கிறாய்
🌺⚪🌙என்னவளின் முகத்தை உனதழகாக்கிக் 'கொல்'கிறாய்
🌺⚪🌙என் அன்னையின் பாசத்தை வளர்பிறையாக வார்க்கிறாய்
🌺⚪🌙என் தனிமையின் கொடுமையை தேய்பிறையாய் குறிக்கிறாய்
🌺⚪🌙என் மகனின் நடையை உன் அசைவாக்கி நகர்கிறாய்
🌺⚪🌙என் தலையின் மேல்தோற்றத்தை பிறையாக்கி சிரிக்கிறாய்
🌺⚪🌙என் தலைவனின் தொடர் வெற்றிகளை ஒளியாக்கி மிளிர்கிறாய்
🌺⚪🌙எம் ஆசையின் எல்லையை உன் உயரமாக்கிப் பறக்கிறாய்
🌺⚪🌙நிலவே,
இரவின் அழகை இதமாய் உரித்துக்காட்டுவது உன் கடமை
🌺⚪🌙உறவின் ஆழத்தை உணர்த்திக் காட்டுவது உன் தனிமை
🌺⚪🌙சூரியனின் முன் உன் அடக்கம் எங்களுக்கு கற்றவர் சொல்லும் உவமை
🌺⚪🌙நாட்கள் போயினும் மாறாதிருப்பது உன் இளமை
🌺⚪🌙வாழ்வின் நியதியை ஒவ்வொரு மாதமும் நீ உணர்த்துவது அருமை
🌺⚪🌙அதன் மூலம் தோல்வியில் துவண்டவர்களுக்கு நீ ஊட்டுவது மனவலிமை
🌺⚪🌙உன்னை பற்றி எழுத எழுத, அட அந்த வார்த்தைகள் கூட இனிமை!...!
---🌺⚪🌙💐🙏
Comments