கந்தகம் பூசப்படும் தேங்காய்கள்.! எண்ணையில் ஏறும் விஷம் - உங்களுக்கு இது தெரியுமா.?

கந்தகம் பூசப்படும் தேய்ங்காய்கள்.! எண்ணையில் ஏறும் விஷம் - உங்களுக்கு இது தெரியுமா.?

தேங்காய் இன்று உடைத்து வைத்து மிச்சம் இருந்தால் குளிர்சாதனத்தில்
வைக்கிறோம். வெளியே வைத்தால் என்ன ஆகும்?...

அப்படியானால் லட்சக்கணக்கான தேங்காயை உடைத்து வியாபாரிகள்
எப்படி பயன் படுத்துவார்கள்?

தேங்காய் எண்ணை
தயாரிப்புக்கு அடி நாதமாக விளங்கும் இந்த கொப்பரையை பதப்படுத்த
இயற்கையான முறையில் தயார் செய்ய இயற்கையாக காய வைத்தாலே போதும்.

நியாயமாக தொழில் செய்ய
மக்களுக்கு நன்மை தர நல்ல
தரமான கொப்பரை இருந்தால்தானே சுத்தமான தேங்காய் எண்ணை கிடைக்கும்?

ஆனால் பணம் செய்ய எதையும் செய்யலாம்? எப்படியும் செய்யலாம்?
என்ற சிந்தனை அரசியல்வாதிகளிடம் இருந்து வியாபாரிகளுக்கும்
பரவியதால் கொப்பரையில்
பட்டாசு தயாரிக்க பயன்படும்
கந்தகத்தைத் தடவி இருப்பு
வைக்கிறார்கள்.

தேங்காய் விலை ஏறும் காலத்தில் இவர்களுக்கு விலை அதிகமாக கிடைக்க இந்த முறை பயன்படுகிறது.

சபரி மலை ஐய்யப்பன்
கோவிலில் வெடி வழிபாடு நடக்கும்.
கோடிக்கணக்கான தேங்காய்
உடைத்து வழிபாடும் நடக்கும்.கீழே கொண்டு போய்சேர்த்து எண்ணெய் கம்பெனிகளிடம் சேர்க்க காலதாமதம் ஆகும்.

அதனால் வெடி வழிபாடுசெய்யும் இடத்திலேயே கந்தகம்(SULPHUR) பூசப்படுகிறது.

கந்தகத்தால் பாதுகாக்கப்பட்ட
கொப்பரைகள் பல மாதங்களானாலும் ஒன்றும் ஆகாது.

ஒரு பொருளில் புழு
வந்தாலோ,வண்டு வந்தாலோ,பூசனம்
பூத்தாலோ உயிர்த் தன்மை இருக்கும். புழு,பூச்சி சாப்பிட்டது போக மீதி கிடைப்பதை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.இதுதான் நியதி...ஆனால் நமக்கு இரண்டு வருடம் ஆனாலும் ஹார்லிக்ஸ் மாதிரி கெடாமல் இருக்கணும். அதற்கு கெமிக்கலை கலந்தால்தான் கெடாது.

கெமிக்கலில் தேய்காயை முக்கினால்
என்னவாகும்!?கொப்பரையில் உள்ள அமிலகந்தகம் உடம்புக்குள்
போனால் என்னவாகும்?

1. கேன்சர் வரும்
2. வயிறு கோளாறு வரும்....
3. ரத்த ஓட்டம் அதிகரித்து
4. ரத்தக்கொதிப்பு வரும்....
5. சுரப்பிகள் சீர் கெட்டு
நீரிழிவு நோய் வரும்....
6. உடல் பருமன்
மாறுபடும்...
7. கிட்னி பழுதடையும்......
இருதய துடிப்பு
8. எண்ணிக்கை மாறுபடும்....
புத்தி வேறுபடும்....
9. சோரியாசிஸ் தோல் வியாதிகள் வரும்....

சரி...இதோடு போனால்
பரவாயில்லை.தேங்காய் விலை உயர்வு... எள் விலை உயர்வு...
கடலை விலை உயர்வு... சூரியகாந்தி
விதை உற்பத்தி குறைவு...
இதனால் எண்ணெய் விலைகள்
கடும் விலை உயர வேண்டும்.

ஆனால் அப்படி உயராமல் விலை
குறைவாகதான் உள்ளது.

ஒரு சிறிய பார்வை....!

ஒரு லிட்டர் எண்ணெய் தயாரிக்க சுமார் மூன்று கிலோ விதை தேவைப்படும்.நிலக்கடலை கிலோ
ரூ70*3kg=Rs210
எள் கிலோ ரூ90*3kg=Rs 270
சூரியகாந்தி விதை
ரூ55*3kg=Rs 165 மேலே சொன்ன விலை ஒரு கிலோவுக்கு என்றாலும்
ஆட்கள் சம்பளம்,கரண்டு பில்
,கழிவு,லாபம் கணக்கிட்டால் விலை எங்கே போகும்!?

இப்படி விலை பிரச்சனையால் எல்லா
இடத்திலும் ஒரு தந்திரத்தனம்
உருவாகிறது.அதனால் மனித இனத்திற்கே கேள்விக்குறி ஆகிறது?!

சுகாதாரத்துறைக்கு இதை கவனிக்க நேரமில்லை.. மக்கள் நிலை அதோ கதிதான் .?  BY AASCAR SIVAKOLUNDU

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth