இன்னிக்கி போகியாச்சே பழசை எல்லாம் க்ளீன் பண்ணலாம்னு

இன்னிக்கி போகியாச்சே பழசை எல்லாம் க்ளீன் பண்ணலாம்னு

சிரத்தையாக ஆரம்பித்தேன் .....

பித்தளைப்பாத்திரத்தில் பாட்டி சிரித்தாள்

வால்வு ரேடியோவில் தாத்தா பேசினார்

அப்பாவின் டயிரியில் வாழ்க்கையின் வரவு செலவு

அம்மாவின் கோலநோட்டில் வாழ்க்கையின் நெளிவு சுளிவு

படித்துக் கிழித்த பாடபுத்தகங்கள்

பாடிக் கழித்த பாடல் புத்தகங்கள்

கடிதங்கள், வாழ்த்துகள் அட்டைகள்,

பழய சம்பள கவர்கள், ரேடியோ லைசென்ஸ்

ஒவ்வொன்றாய்த் தடவி மகிழ்ந்தேன்

பின்னோக்கிப் பெரும் பயணம் செய்து ......

எதையுமே கழிக்காமல் அத்தனையும் மீண்டும் பரணில்

நூற்றாண்டு நினைவு சுமக்கும் பொக்கிஷங்களைக் கழிப்பதற்கு

எவருக்குத்தான் மனம் வரும் !!

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth