உலகமே அழிந்தாலும்...!

உலகமே அழிந்தாலும்...!
திடீரென ஒருநாள் உலகம் அழிய போகிறது...
கடவுள் உலக அழிவிற்கு பின்னர் மீண்டும் புதிய உலகை உருவாக்க ஒவ்வொரு உயிாினத்திலும் பத்து என தனியாக உலக அழிவிலிருந்து பாதுகாத்து வைத்தார்.
பெரும் பிரளயம் உண்டாகி கடவுள் பாதுகாத்த உயிர்களைத் தவிர மற்ற அனைத்தும் அழிந்து நிா்மூலமாகின.
எல்லாம் முடிந்து ஓய்ந்த பிறகு...  தான் பாதுகாத்து வைத்திருந்த உயிரினங்கள் ஒவ்வொன்றாக பூமிக்கு அனுப்பி வைத்தார்.
மான்கள் இறங்கியவுடன் கூட்டமாக ஒன்று சேர்ந்து ஒரே திசையில் ஓடின.
காக்கைகளை இறக்கி விட்ட உடன் அவை கூட்டமாக ஒன்று கூடி ஒரே திசையில் பறந்தன.
புலிகள் இறங்கியவுடன் ஒன்றாக காட்டுக்குள் ஓடி மறைந்தன.
யானைகள் முதல் எறும்புகள், கரப்பான் பூச்சிகள், மீன்கள் வரை இப்படி அனைத்து உயிரினங்களும் தன் இனத்தோடு சேர்ந்து சென்று வாழ தொடங்கின.
கடைசியாக பத்து மனிதர்களையும் இறக்கி விட்ட கையோடு 'உயிாினங்களிலேயே நீங்கள் தான் பகுத்தறிவு பெற்றவர்கள்.  எனவே அனைத்து உயிர்களையும் பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்' என சொல்ல முற்படும் போது மனிதா்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
ஏனெனில் பத்து பேரும் பத்து திசையில் சென்று கொண்டிருந்தனா்.  அவர்களில் நல்ல முதிர்ச்சியான, படித்த, பண்பானவா் போல தோன்றிய ஒருவரை அழைத்து 'ஏனப்பா எல்லோரும் ஒன்றாய் செல்லாமல் ஆளுக்கு ஒரு திசையில் செல்கிறீர்கள்? ' என்று கேட்டார்.
அதற்கு அவன்,  'அவனுங்க எல்லாம் வேற வேற சாதி சாமி... அவனுங்க கூட சோ்ந்தா என் கௌரவம் என்னாவது? ' என்று சொல்லிக் கொண்டே...  'ஆமா சாமி!  நீ இந்து கடவுளா? கிறித்துவ கடவுளா? முஸ்லீம் கடவுளா? ' என்றானே பார்க்கலாம்...!!???!!!???

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth