கண்ணீரில் பூமித்தாய்..

கண்ணீரில் பூமித்தாய்..

உழுதுண்ட ஏரெல்லாம்
பழுதாகிப் போனதென்ன..?
பண்பட்ட நிலமெல்லாம்
புண்பட்ட மேனியிலே
பலமிழந்து நிற்குதடி,
பழிவாங்கும் ஆய்வுகளால்..!

விஞ்ஞான வளர்ச்சியெனும்,
வேளாண்மை ஆராய்ச்சி,
விளைநிலத்தை கூறுபோடும்
வேதியலின் தூண்டுதலால்,
ரசாயணத்தின் பிடிகளிலே-
ரணகளமாய் பூமித்தாய்..!

அள்ளித்தந்த அன்னையவள்
அங்கமது துடிதுடிக்க,
நிலத்தடியில் துளையிட்டு
நீரெல்லாம் உறிஞ்சியபின்;
கலம்கூட விளையாமல்-
கஞ்சியின்றி தவிக்கின்றான்..!

உயிர்கொல்லும் தாகத்தால்,
ஊறிப்போன நாவுகளால்,
பசுமையுட னவள்சேர்ந்து;
பருகிவிட்ட திராவகத்தால்,
பிழைப்போமா யெனச்சொல்லி-
பிளவுபட்டாள் நெஞ்சத்தில்..!

அரசியலின் பேரைச்சொல்லி
ஆதாயம் அவனெடுக்க,
இலவசங்கள் கொடுத்துவிட்டு
இதயத்தில் விடம்வைத்து,
மலம்விடுத்து மலம்கழிக்கும்
மக்களாக்கப் பார்க்கின்றான்..!

மகசூலை பெருக்கிவிட
மந்திரங்கள் செய்வதுபோல்,
உயர்ரகம் விதைகளென
உருவத்தில் பருமனாக்கி;
உணவென்னும் காய்கனிகள்-
உயிரெடுக்க விற்கின்றான்..!

தாய்பாலைத் தவிரயெல்லாம்
தரமிழந்துப் போனதடி..!
தாவரங்கள் தருமுணவும்
தலைவலியா யானதடி..!
தவறேதும் செய்யாமல்
தண்டனையில் மனிதயினம்..!

காணிநில விளைச்சலது;
காணாமல் போனதின்று,
கட்டிடங்க ளாக்கிவிட்டு,
கல்மண்ணை திண்பானோ..?
சாகுபடி சாதனையின்மேல்
சமாதியில் வாழும்நிலை..!

தன்னருமைத் தெரியாமல்,
தாய்மனதை அறியாமல்,
அடுத்தவரின் வாய்பார்த்து,
அடிமையாகிப் போகும்வரை
விடுதலையும் இருக்காது ;
விளைநிலமோ உனக்கேது..?

சிந்திப்போம்.    KING 👑

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth