இது_புதுசா_கல்யாணம்_ஆன_ஆண்கள்_அனைவருக்கான_பதிவு

#இது_புதுசா_கல்யாணம்_ஆன_ஆண்கள்_அனைவருக்கான_பதிவு
#Girls_No_Violence #பெண்கள்_அடுத்த_பதிவை_படிக்கவும்
கல்யாணத்துக்கு மறுநாளில் இருந்துதான், சமையலை கிச்சனில் செய்வார்கள், என்ற அரிய உண்மை பல பெண்களுக்கு தெரியவருகிறது. அவர்கள் சில பல நிர்பந்தகள் காரணமாக சமைக்க நேரிடுகிறது, அப்படி சமைத்து சாப்பாடு போடும் பொழுது, "சாப்பிட்ட பின் ஏதும் என்னை பாராட்டுறீங்களா? எவ்வளோ கஷ்டப்பட்டு செஞ்சேன்! " என்று கண்ணை கசக்கிட்டு நிற்பார்கள். சாப்பிட்ட நமக்கோ என்ன சாப்பிட்டோம் என்றே தெரியாது!
#சாப்பிட்டது_சாம்பார் என்று _உறுதி _செய்வது _எப்படி?
மஞ்சள் நிறத்திலும் அதில் துவரம் பருப்பும் இருந்தால் அது சாம்பார் தான் என்று கிட்டதட்ட முடிவு செய்துவிடலாம், அதில் முருங்கைகாய், வெங்காயம் போன்ற காய்கறிகள் இருந்தால் அது கண்டிப்பாக சாம்பார்தான். சில சமயம் வித்தியாசமாக செய்கிறேன் என்று அதில் தேங்காய் அரைத்து விடுவார்கள் அப்படி இருந்தாலும் அது கண்டிப்பாக சாம்பார்தான்.
#ரிஸ்க் : மஞ்சள் நிறம் கொஞ்சம் குறைவாகவும், சிகப்பு நிறம் கொஞ்சம் அதிகமாகவும் இருக்கும் ஆனால் அதில் துவரம் பருப்பு இருக்கா என்று உறுதி செய்துக்கொள்ளவும். சிலர் பாசிப்பருப்பும் போடுவார்கள்.

ரசம் என்று உறுதி செய்வது எப்படி?
நிறம் மஞ்சள் கொஞ்சம் குறைவாகவும், மிகவும் தண்ணியாகவும் இருக்கும் அதில் காய்கறி இருக்காது,சில சமயம் துவரம்பருப்பு இருக்கும் இங்கே கவனம் தேவை, முதலில் காய்கறி இல்லை என்பதை உறுதி செய்யதபின் ரசம் தான் என்ற முடிவுக்கு வந்துவிடலாம்.
#ரிஸ்க் : தண்ணியாக இருப்பது எல்லாம் ரசம் இல்லை, சூடாகவும் கொஞ்சம் இனிப்பாகவும் கொஞ்சமாக டம்ளரில் காலையிலும்,மாலையிலும் கொடுத்தால்அதற்கு பெயர் டீ அல்லது காப்பி! (சில சமயம் சர்க்கரை போட மறந்தாலும் மறந்து இருக்கலாம்).
புளிக்குழம்பு அல்லது வற்றல் குழம்பு உறுதி செய்வது எப்படி?
நிறம் கொஞ்சம் சிகப்பு கலரிலும், கொஞ்சம் கெட்டியாகவும் இருக்கும் ,பூண்டு வெங்காயம் போன்றவை இருக்கும் பருப்பு இருக்காது அப்படி இருந்தால் அது புளிக்குழம்பு,அதில் கொஞ்சமாக சுண்டைக்காய் போன்ற வத்தல் கருக்கி கருப்பு நிறத்தில் அதில் கிடந்தால் அது வத்தல் குழம்பு.

சாதம் வகைகள்
சாதம் வெள்ளையாகவும் உப்பு, உறைப்பு ஏதுவும் இல்லாமல் இருந்தால் அது வெறும் சாதம். (கொஞ்சம் உறைப்பாக இருந்தாலோ அல்லது கொஞ்சம் உப்பாக இருந்தாலோ அது ஏதோ வெரைட்டி சாதம்).

#ரிஸ்க் : சில சமயம் குழஞ்சி பொங்கல் போல இருக்கும் ஆனால் அதில் மிளகு, பச்சை மிளகாய் போன்றவை இருக்கா என்று பார்க்கவும் அப்படி இருந்தால் அது பொங்கல். இல்லை என்றால் அது வெறும் சாதம்.
புளிசாதம்: நிறம் கொஞ்சம் சிகப்பாகவும் அதில் கொஞ்சம் நிலக்கடலையும், காய்ந்த மிளகாயும் கிடக்கும் அப்படி இருந்தால் அது புளிசாதம். சுவை சில சமயம் புளிப்பு.
லெமன் ரைஸ்: நிறம் மஞ்சள், சுவை கொஞ்சம் புளிப்ப்பு, கடலைபருப்பு, பச்சை மிளகாய் கிடக்கும்.
இந்த இருவகை சாதத்தையும் சரியாக கண்டுபிடிக்க ஆரம்பித்துவிட்டால் இனி பிரச்சினை இல்லை.

#சிக்கன்_பிரியாணி : அதே புளிசாதம் போல் சிகப்பு ஆனால் சிக்கன் பீஸ் கிடக்கும் அப்படி இருந்தால் அது சிக்கன் பிரியாணி, அவசரப்பட்டு சிக்கன் புளிசாதம் என்று சொல்லிவிடக்கூடாது.
#ரிஸ்க் : சிலசமயம் மனைவியின் அப்பா,அம்மா, தம்பி , அக்கா வந்து இருந்தால் உங்களுக்கு வெறும் சாதம் மட்டுமே கிடைக்கும் அதை வைத்து அவசரப்பட்டு புளிசாதம் என்று சொல்லிடக்கூடாது அன்று அமைதியாக இருப்பது நலம்.
அதுமட்டும் இன்றி அவர்கள் வந்து இருந்தால் அன்று விசேசமாக நான் வெஜ் தான் இருக்கும் வெஜ் இருக்காது ஆகையால் அது சிக்கன் உங்களுக்கு வந்தாலும் வராவிட்டாலும் அது பிரியாணிதான்.
முக்கியமாக பிரியாணியில் பருப்பு வகைகள் இருக்காது.

இதர சில குறிப்புகள்
சேமியா போட்டு கொஞ்சம் தண்ணியாகவும் கொஞ்சம் இனிப்பாகவும் இருந்தால் அது பாயசம், அதே சேமியா கொஞ்சம் உறைப்பாக இருந்தால் அது கிச்சடி. (கிச்சடி கெட்டியாகதான் இருக்கும் என்று சொல்லமுடியாது சில சமயம் டம்ளரில் கிச்சடி குடித்த நண்பர்கள் கூட இருக்கிறார்கள்.)
ரவை போட்டு அது இனிப்பாகவும் கொஞ்சம் சிகப்பு கலரிலும் இருந்தால் அது கேசரி, அதுவே கொஞ்சம் உப்பாக இருந்தால் அது ரவா உப்புமா!
கொஞ்சம் கடலைமாவில் உள்ளே வெங்காயம்,அல்லது காளிபிளவர்,அல்லது உருளைகிழங்கு போன்றவை இருந்தால் அவை பஞ்சி.(மொறுமொறுப்பாக இருக்கவேண்டு என்ற அவசியம் இல்லை).

வடை: தட்டையாகவும் நடுவில் ஓட்டையும் இருந்தால் அது வடை, ஓட்டை இல்லாமல் இருந்தால் அது போண்டா! (இப்பொழுது வடை வட்டமாக வருவது இல்லை)

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth