இன்று நாம் காணவிருப்பது சனி பகவானுக்குரிய தாந்த்ரீகப் பரிகாரங்களாகும்.
சனி பகவானின் மூலிகையான வடக்கு போகும் செவ்வரலி வேரை தாயத்தாக அணியவும். அதனால் வெற்றி மேல் வெற்றி உண்டாகும். சர்வ சக்தி, ஆயுள் பலம், நினைத்ததை சாதிக்க வைக்கும். ஏழரை சனி, அஷ்டமத்து சனி, சர்வ சாபங்களும் விலகும். சனி பகவானின் 19 வருட பலன் கிட்டும்.
தங்களின் நட்சத்திரமன்று வன்னி மரத்திற்கு தேங்காய் பழம் வைத்து தீபதூபம் காட்டி வழிபடவும். தொடர்ந்து 27 தடவை வலம் வரவும். இப்படி ஒவ்வொரு மாதத்திலும் தங்களது நட்சத்திரமாக வழிபடவும். சனியின் நட்சத்திரமான பூசம், அனுசம், உத்திரட்டாதியில் பிறந்தவர்களுக்கு சனி மகாதசை, புத்தி நல்ல பலனைக் கொடுக்கும்.
சனிக்கிழமைதோறும் உடல் ஊனமுற்றவர்களுக்கு அன்னதானம் செய்யவும். சனிக்கிழமையன்று கருப்பு எள்ளை 27 முறை தலையில் சுற்றி ஓடுகின்ற நீரில் போடவும். இதுவும் சனி ப்ரீதியாகும். சனிக்கிழமையன்று சனிபகவானுக்கு கரும்பூவளைப் பூமாலையை அணிவித்து அர்ச்சனை செய்துவர சனி ப்ரீதி உண்டாகும்.
கருப்பு எள்ளை 9 வெற்றிலை பாக்குடன் சேர்த்து, காகிதத்தில் மடித்து, சனிக்கிழமை இரவே தலையணையின் கீழ் வைத்து மறுநாள் எடுத்து சேகரிக்கவும். இதுபோன்று 19-வாரம் சேகரித்து, 20 -வது வாரம் சனி ஹோரை ஓடிக்கொண்டிருக்கின்ற வேளையிலே ஓடும் நீரில் போட்டு விட அற்புதபலன்களைப் பெறலாம் என்று கூறி இப்பகுதியை நிறைவு செய்து,
Comments