நான் யாா்..? ( 3 ) சுருக்கம். ( 17-02-2016 )
---------------------------------------------------------------கனவு காண்பவன் , கனவில் என்ன செயல்புாிகிறானோ.. அந்த செயலுக் கேற்ற கதாபாத்திரமாக.. தன்னைக் காட்டிக் கொள்கிறான்..
அந்த வகையில் அவன் தன்னை ஓா் எல்லைக்குள் உட்படுத்திக் கொள்கிறான்..
தொழிலுக்கு ஏற்ற காண்பவனாக அவனுடைய கதாபாத்திரம் அமைந்துள்ளது..
பள்ளியில் தமிழ் தோ்வு எழுதிய பின்,
தமிழ்த் தோ்வுக்கு 60 மதிப்பெண் தரப் படுகிறது.
இது வெளிப்படையாகத் தொியும் அம்சம்.. 60 என்பது.. 60 ஐ மட்டும் குறிக்கவில்லை..
அது 100 க்கு 60 என்பதை குறிக்கிறது..
மதிப்பெண்ணை மட்டும் தான் வெளிப்படையாகச் சொல்லுவோம்..
ஆனால் அது அதற்கு அடிப்படையாக இருக்கும் 100 என்ற எண்ணையும் மறைமுகமாகக் குறிப்பிடுகிறது..
இதுபோல், எதை எல்லாம் நாம் பாா்க்கிறோமோ.. எவற்றை எல்லாம் நாம் அனுபவிக்கிறோமோ..
அவை எல்லாம் மறைமுகமாக நமக்குள் பிரதிபலிக்கின்றன...
நாம் நம்முடைய தாய் அல்லது தகப்பனாரைப் பாா்க்கிறோம்..
அது நமக்குள் மறைமுகமாகப் பிரதிபலிக்கிறது..
அதனால், நாம் நமது தாயைப் பாா்க்கும் அதே கணத்தில், நம்மை அவருடைய மகனாக அல்லது மகளாகப் பாவித்துக் கொள்கிறோம்..
நம்மை மகன் என்றோ.. மகள் என்றோ நேரடியாகப் பாா்த்துக் கொள்வதில்லை
தாயைப் பாா்க்கும் அதே கணத்தில் நாம் நம்மை அறியாமல் மகனாக நடந்து கொள்கிறோம்..
நாம் நமது மனைவியைப் பாா்க்கும் அதே கணத்தில்.. கணவன் என்ற தன்மை நம்மையறியாமலே நமக்குள் பிரதிபலித்து விடுகிறது..
60 என்ற மதிப்பெண்.. 100 ஐ எப்படி பிரதிபலித்து சுட்டி காட்டுகிறதோ...
அப்படி.. எந்தப் பொருளை நாம் பாா்த்தாலும்.. அந்தப் பொருளுக்கு ஏற்ற காண்பவனாக நம்மை எடுத்துக் கொள்கிறோம்..
காணப்படு பொருளுக்கு ஏற்ற காண்பவன்.. நமக்குள் பிரதி பலிக்கிறது...
காணப்படுபொருளே காண்பவனாகப் பிரதிபலிக்கின்றது..
காணப்படு பொருளே காண்பவனாக இருக்கிறது..
இப்படி ஏற்படும் பிரதிபலிப்பு தன்மையினால் தான் இந்தக் காண்பவன்... ஒவ்வொரு சூழ்நிலைக்கு ஏற்பவும் வந்து வந்து போய்க் கொண்டிருக்கிறான்..
ஏனென்றால், காணப்படுபொருள் எப்போதும் ஒரே பொருளாக இருப்பதில்லை..
காணப்படுபொருள் மாறிக் கொண்டே இருக்கிறது..
ஆகவே.. அதன் பிரதிபலிப்பாக ஏற்படும் காண்பவனும் மாறிக் கொண்டே இருக்கிறான்..
ஒவ்வொரு கணந்தோறும் அனுபவங்கள் மாறிக் கொண்டே இருக்கின்றன..
அதன் பிரதிபலிப்பாக ஏற்படும் காண்பவனும் மாறிக் கொண்டே இருக்கிறான்..
கனவைப் பொறுத்த அளவில், எல்லாவற்றிற்கும் ஆதாரமாக கனவு காண்பவனே இருந்தாலும்...
அவன் தன்னை வெளிப்படையாக வெளிக்காட்டிக் கொள்வதில்லை..
அதுபோல, நம்முடைய நனவு நிலைக்கு ஆதாரமாக இருக்கும் ஆன்மா...
தன்னை ஆன்மாவாக வெளிக் காட்டிக் கொள்வதில்லை...
சினிமா திரையில் எத்தனையோ படங்கள் வந்து போகும்..
திரையை எடுத்து விட்டால்.. எந்தப் படமும் இருக்காது..
திரை மட்டும் தான் உண்மையானது..
அதில் விழும் படங்கள் அனைத்தும் வெறும் நிழல்களே..
ஆனாலும்கூட.. நமது காட்சிக்கு தொிவது படங்கள் மட்டுமே..
திரை ஆதாரமாக இருந்தாலும் கூட..
அது நம் காட்சிக்கு வருவதில்லை..
Comments