இன்றைய 27.03.2016 கல்வித் தகவல்கள் தொகுப்பு -

🌹இன்றைய 27.03.2016 கல்வித் தகவல்கள் தொகுப்பு -
====================================
🌹தேர்வு நேரத்தில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதால் ஆசிரியர்கள் புலம்பி வருகின்றனர்.பத்தாம் வகுப்பு தேர்வு ஏப்.,13வரை நடக்கிறது. ஆறு முதல்9ம் வகுப்பு களுக்கு ஏப்ரலில் தேர்வு துவங்குகிறது. தேர்வு சமயத்தில் சமூக அறிவியல் பட்டதாரிஆசிரியர்களுக்கு அனை வருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டம் மூலம்10நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றன.

ஆசிரியர்கள் பயிற்சிக்கு செல்வதால் மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும்10ம்வகுப்பு தேர்வு பணி,பயிற்சி என,மாறி,மாறி செல்வதால் மனஉளைச்சல் ஏற்படுவ தாக ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.

கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: அடுத்த கல்வியாண்டில் நடக்கும் பயிற்சிகளை எவ்வாறு நடத்துவது என்பதை ஆலோசனை நடத்தவே ஆசிரியர்களை அழைத்துள்ளோம். ஒருகுறிப்பிட்ட ஆசிரியர்களை மட்டுமே தேர்வு செய்துள்ளோம். இதனால் தேர்வுக்கு எந்தவிதத்திலும் பாதிப்பு ஏற்படாது,என்றார்.

🌹தமிழ்நாடு சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செயல்பட்டு வரும் மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி மையம்த்தில் நிரப்பப்பட உள்ள 24 ஆராய்ச்சியாளர், முதுநிலை ஆராய்ச்சியாளர், டெக்னிக்கல் அசிஸ்டன்ட் போன்ற பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

🌹தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் கட்டமைப்பு வளர்ச்சி கழக நிறுவனத்தில் (டுபிட்கோ) நிரப்பப்பட உள்ள பொது மேலாளர், மேலாளர், இளநிலை மேலாளர், கம்ப்யூட்டர் புரோகிராமர், ஸ்டெனோ உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

🌹சட்டசபை தேர்தலால், அனைத்து பல்கலைகளிலும் முன்கூட்டியே தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. மே மாதம் முதல் வாரத்திற்குள் தேர்வுகளை முடிக்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

🌹தமிழக பி.எட்., கல்லுாரிகளில் வகுப்புகள் துவங்கி, ஆறு மாதமாகியும் பாடத்திட்டம் தெரியாமல், மாணவர்கள், ஆசிரியர்கள் தவிக்கின்றனர்.

🌹G.O (2D). No. 6 Dt: February 19, 2016அறிவிப்புகள் - சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை - வளரிளம் பருவத்திலுள்ள மாணாக்கரிடையே தற்கொலை எண்ணத்தினைˆ தவிர்க்க ஆலோசனை வழங்கும் திட்டம் .15.04 இலட்சம் ஒதுக்கீடு செய்து ஆணை வெளியிடப்படுகிறது.

🌹மாற்றுத்திறனாளிகளை வரிசையில் நிற்க வைக்காமல், வாக்களிக்க முன்னுரிமை வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

🌹தகவல் அறியும் உரிமைச் சட்டம்-M.Com.,M.A.Economics.,படிப்புகளுக்கு ஊக்க ஊதியம் உண்டு. RTI-பதில்.

🌹 🙏🙏🙏

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth