கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தார் பி.சுசீலா!

கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தார் பி.சுசீலா!

உலகில் அதிக பாடல் பாடியமைக்காக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார் 'கான சரஸ்வதி'-யான பி.சுசீலா. 1935ம் ஆண்டு, நவம்பர் 13ம் தேதி, ஆந்திராவில் பிறந்தவர் பி.சுசீலா. சிறு வயதிலேயே இசை மீது தீராத காதல் கொண்ட சுசீலா முறையாக இசைப்பயிற்சி பயின்றார். ஆரம்பகாலத்தில் ஆல் இந்தியா ரேடியோவில் பாடி வந்தார் சுசீலா. 1950ம் ஆண்டு இசையமைப்பாளர் பெண்டயாலா நாகேஸ்வர ராவ், புதுமுக பாடகி ஒருவரை தேடி வந்தார். அப்போது ஆல் இந்தியா ரேடியோ சார்பில் சுசீலா உள்ளிட்ட 5பேர் பரிந்துரைக்கப்பட்டார்கள். அதில் பி.சுசீலா தேர்வானார்.

1952ம் ஆண்டு தமிழில் வெளியான பெற்ற தாய் என்ற படத்தில் எதற்கு அழைத்தாய்... என்ற பாடலை முதன்முதலாக பாடினார். அப்போது ஆரம்பித்த சுசீலாவின் பாட்டு பயணம் சுமார் 30 ஆண்டுகள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, பெங்காலி, ஒரியா, உள்ளிட்ட பல மொழிகளில் பாடல்களை பாடினார். இதுவரை அவர் சுமார் 40 ஆயிரம் பாடல்கள் பாடியுள்ளார். சினிமா பாடல் மட்டுமல்லாது ஏராளமான பக்தி பாடல்களையும் பாடியிருக்கிறார் சுசீலா.

இந்நிலையில், 1960 தொடங்கி 2016 வரை, தனியாக 17,965 பாடல்கள் பாடிய பின்னணி பாடகி என்ற சாதனைக்காக, இவர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார். இதற்கான சான்றை கின்னஸ் அமைப்பு, பி.சுசீலாவிடம் இடம் பிடித்திருக்கிறது.

சுசீலா, இதுவரை தமிழில் இரண்டு முறை மற்றும் தெலுங்கில் 4 முறை என மொத்தம் 6 முறை தேசிய விருதுகள் பெற்றுள்ளார். இதுதவிர தமிழக, கேரள, ஆந்திர உள்ளிட்ட பல்வேறு மாநில விருதுகளையும் பெற்றுள்ளார்.

'கான சரஸ்வதி' பி.சுசீலாவின் மணிமகுடத்தில் மற்றுமொரு சாதனை மகுடம் இந்த கின்னஸ் சாதனை.

வாழ்த்துக்கள் பி.சுசீலா மேடம்...!

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth