ருத்ராட்சம்::

ஓம் நமசிவாய

ருத்ராட்சம்::
--------------
சிவபெருமானின் கண்களில் இருந்து தோன்றியது ருத்ராட்சம். அதை அணிபவரை சிவபெருமான் தன் கண் போல் காப்பாற்றுவார் என்பது ஐதீகம். மூன்று முகம் கொண்ட ருத்ராட்சத்தை பெண்கள் அணிந்தால், தீர்க்க சுமங்கலியாக மஞ்சள் குங்குமத்தோடு வாழ்வார்கள். இதனால் அவர்களுடைய கணவருக்கும் நன்மைகள் ஏற்படும். திருவானைக்காவல் அகிலாண்டநாயகி ருத்ராட்சம் அணிந்திருப்பதை காணலாம்.
ருத்ராட்சம் அள்ளித்தரும் பலன்கள்:
இந்துக்களில் சைவம், வைணவம் என்று கூறுவது போல், கிரகங் களிலும் சைவம், வைணவம் என் றெல்லாம் உண்டு.
சூரியன், சனி, செவ்வாய், குரு ஆகிய வை சிவ கோத்திரம். சனியை இரண் டு பக்கத்திலும் வைக்கலாம்.
செவ்வாய், குரு, சூரியன் ஆகிய மூன் றும் சைவக் கிரகங்கள், சைவக் கட வுள்கள் ஆகும். செவ்வாய் – முருகன், குரு – தட்சிணாமூர்த்தி, சூரியன் சிவனுக்குரியவர்கள். இந்த ஆதிக்கம் உடையவர்கள் எல்லாம் ருத்ராட்சம் அணிந்தால் பிரம்மாண்டமாக முன்னுக்கு வருவார்கள்.
அதிலேயும் ருத்ராட்சத்திலும் ஒன்று முதல் பல முகங்கள் கொண்ட ருத்ராட்சங்கள் உள் ளன. ஆனால் எல்லா முக ருத்ராட்சங்களும் பலன் அளிக்கக்கூடிய ருத்ராட்சங்களே. அதில் எந்த மாறுபாடும் இல்லை.
ஒவ்வொரு முகத்திற்கும் ஏற்றபடி அதில் மருத்துவ குணங்களும், ஆன்மீக குணங்களும் உள்ளன.
ஏகமுக ருத்ராட்சம்:
ஜோதிட சாஸ்த்திரத்தின் படி ஏகமுக ருத்ராட்சம் சூரியனின் அதிர்வை பெறுகின்றது. இது இதய நோயை குணப்படுத்தும். வலது கண், தலைவலியைப் போக்கும். தோல் நோயை நீக்கும். சுவாச கோளாறுகளை நீக்கும்.இந்த நோய் உள்ளவர்களோ அல்லது சூரியனின் ஆதிக்கம் குறைந்தவர்களோ ஏகமுக ருத்ராட்சத்தை அணியலாம்.
2 முக ருத்ராட்சம்:
சந்திரனின் ஆதிக்கம் உள்ளது.
சுவாச கோளாறுகள், மூளை வளர்ச்சி குன்றியவர்கள், இடது கண் பதிப்பு உடையவர்கள், நுரையீரல் கோளாறு உடையவர்கள் குடல் புண் உள்ளவர்கள், சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் இதை அணியலாம்.
3 முக ருத்ராட்சம்:
ரத்த சம்பந்தமான நோய்கள் உடையவர்கள் இதை அணியலாம். கழுத்து, காது நோய் உடையவர்கள் ரத்த இறக்கம் (B.P.) குடற்புண், தீராத காயங்கள், எலும்பு சம்பந்தமான வியாதி உடையவர்கள் இதை அணியலாம். செவ்வாயின் அதிர்வுகள் 3 முக ருத்ராட்சதிற்கு உள்ளது.
4முக ருத்ராட்சம்:
கணிதம், எழுத்தும், அறிவும் போன்றவற்றை 4 முக ருத்ராட்சம் ஆதிக்கம் செலுத்துகின்றது. பிஸினஸ் செய்பவர்களுக்கு மிக நல்லது. வாத நோய்கள், ஜுரம், மனம் சம்பந்தப்பட்டவியாதிகளுக்கு இது நல்லது. புதன் அதிர்வுகளை கொண்டது.
5முக ருத்ராட்சம்:
கல்லீரல், கணையம், தொண்டை, பாதம், எலும்பு மஜ்ஜை போன்ற தொடர்பான வியாதிகளை போக்க வல்லது. பணப்புழக்கம், மதம் தொடர்பான விஷயங்கள், உலகாயுத விஷயங்களில் வெற்றி போன்றவற்றைத் தரவல்லது. கடுமையான ஏழ்மையிலிருந்து காப்பாற்றும் தன்மை உடையது. குரு கிரக அதிர்வுகளை கொண்டது.
6முக ருத்ராட்சம்:
ஜனனேந்திரிய உறுப்புகளை நோயை நீக்க வல்லது. வாய்ப்புண், தொண்டை எரிச்சல், இசையில் நாட்டத்தை ஏற்படுத்தும். குடும்ப வாழ்க்கையில் பரஸ்பர அன்பைத் தரும்.
7 முக ருத்ராட்சம்:
மரண பயத்தைப் போக்கும். ஆயுளை நீடிக்கும். ஜலதோசத்தைப் போக்கும். இடுப்புக்கு கீழே உள்ள பகுதிகளில் நோயை நீக்கும். உடலில் உள்ள விசத் தன்மையை நீக்கும். மதுவிற்கு அடிமையானவர்களை விடுதலை தரும். கவலையைப் போக்கும். நம்பிக்கையையும், வெற்றியையும் தரும். சனியின் அதிர்வுகள் படைத்தது.
8 முக ருத்ராட்சம்:
8 முக ருத்ராட்சத்தின் கிரக தேவதை ராகு. சனிக்கு உடைய பலனே இதற்கு எனலாம். திடீர் பிரச்சனைகள், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள், கால், சருமம், கண், சிறுநீரக பிரச்சனைகள், ரத்தத்தில் விஷம் சேருதல் போன்றவை 8 முக ருத்ராட்சம் அணிவதால் நீங்கும்.
9 முக ருத்ராட்சம்:
இதன் கிரக அதி தேவதை கிரகமான கேது. நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் கண், வயது சம்பந்தப்பட்ட கோளாறுகள் எல்லாம் 9 முக ருத்ராட்சம் நீக்கும் என சாஸ்த்திரங்கள் கூறுகின்றன.
10 முக ருத்ராட்சம்:
இதற்கு தனியாக அதிதேவதை இல்லை. இது எல்லா கிரகங்களையும் கட்டுப்படுதும் சக்தி படைத்தது. எந்த தீய கிரகத்தின் தன்மையையும் இது நீக்கும்.
11 முக ருத்ராட்சம்:
தியானம் செய்பவர்களுக்கு இது உதவும். யோக, தியான, ஆன்மிக வாழ்க்கையில் உள்ள சிக்கல்களை இது நீக்கும்.
12 முக ருத்ராட்சம்:
இதன் அதிதேவதை சூரியன். சூரியன் தீய அதிர்வுகளால் ஏற்படும் தீமையை இது நீக்கும்.
13 முக ருத்ராட்சம்:
6 முக ருத்ராட்சத்திற்குள்ள பலன்களே தான் இதற்கும், தியானம், ஆன்மிக வாழ்க்கை உயர்வுக்கு இது உதவும்.
14 முக ருத்ராட்சம்:
இதுவும் 7 முக ருத்ராட்சத்தைப் போல பலன் தரும். சனியின் தீய பலன்களை இது மாற்றும்.
ருத்ராட்சத்தை எப்படி வேண்டுமானாலும் அணியலாம். ஆனால் ருத்ராட்சத்தை தனியாக அணியாமல் ஏதாவது ஒரு உலோகத்துடன் சேர்த்து அணிந்தால் அது இல்லற வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு நல்லது
அதற்காகத்தான் ருத்ராட்சத்தின் இரு பக்கத்திலும் பூன் போன்று செய்து அதனை நூலில் கட்டித் தொங்க விடுகிறார்கள்.
ருத்ராட்சத்திற்கு இயல்பாகவே மருத்துவ குணங்கள் நிறைய உண்டு. ருத்ராட்சத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம்.
ஆனால், ருத்ராட்சத்தை தங்கம் அல்லது வெள்ளியில் கட்டி அணி யும் போது, மந்த்ரா உபதேசம் பெற்று, குரு நாதர் கையில் இருந்து வாங்கி அணியும் போதெல்லாம் மிகவும் நேமமிஷ்டையுடன் இருக்க வேண்டும். அதாவது தீட்சையாக தரும் ருத்ராட்சத்தை பெற்றுக் கொண்டு தவறான செயல்கள், பேச்சுவார்த்தைகளில் ஈடுபடக் கூடாது.
ஆண், பெண் என இருபாலருமே ருத்ராட்சத்தை அணியலாம். பெண் களுக்கு இருக்கக்கூடிய இயல்பான இடர்பாடான நாட்களில் கூட அணிந்திருக்கலாம். அது ஒன்று ம் குரோதம் கிடையாது.
இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத் தக்கூடிய சக்தியும், மன அழுத்த த்தை குறைக்கும் சக்தியும் ருத் ராட்சத்திற்கு உண்டு. பக்கவாத த்திற்கு முந்தைய காலகட்டத்தில் ருத்ராட்ச மாலையை உடம்பு முழுவதும் தேய்த்துவிடும் போது அது சரியாகிறது
சீரான இரத்த ஓட்டங்கள், கால் மறத்துப் போகாமல் இருப்பதற்கு போன்றவற்றிற்கும் ருத்ராட்சம் பயன்படும். ருத்ராட்சத்தின் சிறு துளி யை இழைத்து உள்ளுக்கு சாப்பிடும் போது நோய் எதிர்ப்புச் சக்தியெ ல்லாம் அதிகரிக்கிறது. உடலிற்கு ஒரு மினுமினுப்பைக் கொடுக்கு ம். இதுபோன்ற மருத்துவக் குணங்கள் ருத்ராட்சத்திற்கு உண்டு.

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth