தர்மருக்கும் அர்ஜுனனுக்கும் யுத்தம்.

தர்மருக்கும் அர்ஜுனனுக்கும் யுத்தம்.

குருஷேத்திரப் போரில், கர்ணனுக்கும் தர்மருக்கும் நடந்த போரில் தர்மர் தோற்று விடுகிறார். கர்ணனனோ, நான் கொடுத்த உயிர்ப்பிச்சையால் வாழ்ந்தொழி என்று அனுப்பி விடுகிறான்.

அவமானத்தின் உச்சத்தில் திரும்பி வந்த தர்மர், உணர்ச்சிவசப் பட்டு அர்ஜுனனைப் பார்த்து, அஞ்ஞான வாசத்தில் பேடியாய்த் திரிந்த நீ, இன்னும் அந்தத் தன்மையிலிருந்து வெளிவரவில்லை என்று தன் தம்பியிடம் கோபத்தை வார்த்தைகளால் கொட்டி விடுகிறார்.

மேலும், உன் கையிலிருக்கும் காண்டீபம் கிழவன் கையிலிருக்கும் ஊன்றுகோலா? அல்லது ஆற்றங்கரையிலிருந்து பிடிங்கிய புல்லா என்றும் திட்டி விடுகிறார்.

தன் காண்டீபத்தைப் பழிப்பது தந்தையானாலும் சிரம் வீழ்த்துவேன் என்ற சபதம் கொண்டிருந்த அர்ஜுனன் கோபத்தில் தன் அண்ணனைக் கொல்ல வில்லேந்தி விடுகிறான்.

தர்மரும் எதிராக வில்லேந்தி நிற்கிறார். அருகில் நின்ற கிருஷ்ணன் இடை மறித்து என்ன காரியம் செய்யத் துணிந்தாய் அர்ஜுனா என்று தடுக்கிறார்.

இல்லை கிருஷ்ணா நான் ஏற்கனவே கொண்ட சபதத்தின் படி என் தனுஷைப் பழித்தவரைக் கொன்றே தீருவேன் என்கிறான். கிருஷ்ணன் : அப்படியே ஆகட்டும், நீ உன் அண்ணனைத் தானே கொல்ல வேண்டும்? கொல்.

ஆனால், வேறொரு முறையில் கொன்று விடு. அதாவது, தர்மனை மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளால் திட்டி விடு. இதுவும் அவனைக் கொன்றதற்குச் சமமே!

அவ்வாறே, கீழ்த்தரமாக வசைமொழிந்த அர்ஜுனன், அண்ணனைத் திட்டிய பின் தான் வாழ்வதில் அர்த்தமில்லை என்று தன்னைத் தானே வாளால் வெட்டி மாய்த்துக் கொள்ள முயன்றான்.

தடுத்த கிருஷ்ணன், இதற்காக நீ உன் தலையை வெட்டிக் கொண்டு சாக வேண்டும் என்பதில்லை. வேறொரு உபாயம் சொல்கிறேன் அப்படிச் செய்தால் நீ செத்தவனாவாய் என்கிறார்.

பரந்தாமனின் உபாயத்திற்குக் காத்திருந்த சகோதரர்கள் முன். அர்ஜுனா, “நீ உன்னை நீயே புகழ்ந்து பேசிக் கொள்” அதுவே நீ செத்ததற்குச் சமம் என்கிறார். ________________________________________________________ #மகாபாரதம், #தற்புகழ்ச்சி, #கொலை

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth