பெண் பார்ப்பது எப்படி !

பெண் பார்ப்பது எப்படி  !

ஒரு தத்துவ ஞானியிடம் ஒரு வாலிபன் சென்று  எனக்கு பெண் பார்க்க வேண்டும் என எனது தாய் ஆசைப்படுகிறாள் , நான் எப்படியான பெண்ணை தெரிவு செய்ய வேண்டும்  ? என்று சொல்லித் தாருங்கள் என்றான் .

அதற்கு அவர்

அழகானவளை முடிக்காதே! அடுத்தவன் அவள் மீது ஆசைப்படுவான் .

அலங்கோலமானவளை முடிக்காதே! உனக்கே அவள் மீது வெறுப்பு ஏற்பட்டுவிடும்  .

உயரமானவளை முடிக்காதே!  நீ எட்டி பார்க்க வேண்டி வரும்  .

குட்டையானவளை முடிக்காதே!  அவளுக்காக தலை குனிய வேண்டி வரும்.

பருமனானவளை முடிக்காதே  !உன் மேல் முட்டினால் காயம் ஏற்படும்

மெலிவானவளை முடிக்காதே!  உன் கண்ணுக்கு அவளைக் காண மாட்டாய்

வெள்ளையானவளை முடிக்காதே  ! மெழுகுவர்த்தி தான் ஞாபகத்துக்கு வரும்

கறுத்தவளை முடிக்காதே!  இருட்டில் பேய் என்று பயப்படுவாய்

படிக்காதவளை முடிக்காதே!  நீ கூறுவதை அவள் புரிந்து கொள்ள மாட்டாள்

படித்தவளை முடிக்காதே!  உன்னிடம் விவாதத்துக்கு வருவாள்

பணக்காரியை முடிக்காதே  ! எடுத்ததற்கெல்லாம் எனது பணம் என்பாள்

ஏழையை முடிக்காதே!  உனது மரணத்தின் பின்னர் உனது குழந்தை சிரமப்படும்

அதிகம் அன்பானவளை முடிக்காதே!  உன் மரணத்தின் பின் வேறு ஒருவனிடம் அன்பு திரும்பி விடும்

கோபக்காரியை முடிக்காதே!  உன் வாழ்க்கை நரகமாகி விடும்

அனைத்தும் தெரிந்தவளை முடிக்காதே!  உண் பணத்தை கரைத்து விடுவாள்

ஒன்றும் தெரியாதவளை முடிக்காதே!  நீ வீட்டு வேலைக்காரனாகி விடுவாய்

அமைதியானவளை முடிக்காதே!  நீ செத்தாலும் அமைதியாகவே இருப்பாள்

ஆர்ப்பரிப்பவளை முடிக்காதே!  ஒரு பூச்சிக்கும் ஊரைக்கூட்டி விடுவாள்

ஊருக்குள் முடிக்காதே!  தாய் வீட்டில் கோழி முட்டையிட்டாலும் பார்க்கப்போவாள்

தூரத்தில் முடிக்காதே உன் வாழ்க்கை பிரயாணத்தில் கழியும்

என்று உபதேசித்தார்

வந்த வாலிபன் ஏன் பெரியவரே சுருக்கமாக திருமணமே முடிக்க வேண்டாம் என்று சொல்லியிருக்கலாமேஎன்றான் கோபத்துடன்😳😳😜😜😜

உண்மைய சொல்லு நீ முனிவனா இல்ல உன் பொண்டாட்டி உன்ன அடிச்சு துரத்தி விட்டுட்டாளா.

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth