அரசுப்பள்ளியில் பணியாற்றும் நம்மிடம் இருந்து வர வேண்டிய மாற்றங்களும், ஏற்றங்களும்!!!

அரசுப்பள்ளியில் பணியாற்றும் நம்மிடம்  இருந்து வர வேண்டிய மாற்றங்களும், ஏற்றங்களும்!!!
www.rkkalvisiragukal.blogspot.com

📚ஆசிரியர்கள் தங்களை ஒரு சமூக மாற்றத்திற்கான விதைகள் என்பதை உணரவேண்டும்.

📚ஒரு சிறந்த ஆசிரியர் தொடர்ந்து தம்முடைய வாசிப்பின் மூலம் தன்னை வளப்படுத்திக்
கொண்டே இருக்கவேண்டும்.

📚வகுப்பறையில் தாம் மட்டுமே பேசிக் கொண்டிருக்காமல்,மாணவர்களுக்கு தங்கள் கருத்துக்களை கூற வாய்ப்பு தரவேண்டும்.

📚வகுப்பறைகள் வெறும் சாக்பீஸால் எழுதப்பட்டதாக இல்லாமல் அறிவியல் கணித உபகரணங்களால் உயிர் பெற வேண்டும்.

📚மாணவர்களை வெறும் மதிப்பெண்கள் போடும் கோழிகளாக உருவாக்காமல்,
கலை,
இலக்கிய ,
சமூக செயற்பாட்டாளர்களாக பரிமளிக்க செய்யவேண்டும்.
www.rkkalvisiragukal.blogspot.com
📚மாணவர்களோடு ஆசிரியர்களின் நல்லுறவு  என்பது வகுப்பறையைத்
தாண்டி  நல்ல தோழமையை அடையாளப் படுத்தவும், காலத்தோடு தேவையான நல்ல  வழி காட்டுதல்களை செய்யத்தக்க வகையில் அமையவேண்டும்.

📚ஓவியம்,
கலை,
பேச்சு,
பாட்டு ,
நடனம்,
பிரச்சினைகளை எதிர்கொள்ள தேவைப்படும் மனதைரியம் போன்றவற்றை கற்பிக்க வேண்டும்.

📚தாம் பணியாற்றும் பள்ளியில் பணிபுரியும் சக பணியாளர்கள்,
அலுவலர்கள் முதலானவர்களோடு நட்பு பேண வேண்டும்.(கட்டாயம் இல்லை)
www.rkkalvisiragukal.blogspot.com
📚எதனூடாக கற்றலை மிக எளிமையாக அடைய முடியும் என்கிற தன்னம்பிக்கை நமக்கு இருக்கிறதோ!
அந்த இலக்கை அடையும்வரை தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருக்கவேண்டும்.

📚எந்த மொழிப்பாடமாக இருந்தாலும் அதை முதலில் உங்களுக்கு திருப்தி தரும்வகையில் தயார் செய்து அதனை வகுப்பறைகளில் நடைமுறைபடுத்த வேண்டும், ஒருபோதும் நீங்கள் எதிர்பார்க்கும் கருத்தை திணிக்கக்கூடாது

📚கணிணி,
குறுந்தகடு(CD),
அடர்தகடு(DVD),
வலைத்தளம்,
கட்செவி,
சுட்டுரை,  மின்னஞ்சல்,
செய்தித்தாள்கள் ,
காட்சி ஊடகங்கள் போன்ற தகவல் தொழில்நுட்பங்களைக் கொண்டு
கற்றல் கற்பித்தலை மேம்படுத்த வேண்டும்.

📚நாம் பணியாற்றும் பள்ளியும்,
நம்மிடம் பயிலும் மாணவர்களும் ஏழை எளிய மாணவர்கள் என்பதை உணரவேண்டும்.

📚நம்மிடத்தில் பயின்ற மாணவர்கள் உச்சநிலைக்கு சென்றபிறகு அதற்கு அடிப்படை காரணகர்த்தாவாக நாம்தான் இருந்தோம். எனபதை அம்மாணவனால் அடையாளப் படுத்தும் போது அதைவிட வேறு உயரிய விருது தேவையில்லையே??

📚விதைத்தவன் உறங்கினாலும்,  விதைகள் உறங்குவதில்லை. என்பதற்கேற்ப எப்பவும் நாம் விதைப்பவர் களாகவே இருப்போம்....
www.rkkalvisiragukal.blogspot.com

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth