உலக, தேசிய, சினிமா மற்றும் விளையாட்டு செய்திகள்

♈🇮🇳உலக, தேசிய, சினிமா மற்றும் விளையாட்டு செய்திகள்🇮🇳♈

♈🇮🇳🌴அயோத்தியில் ராமர் கோவில் கட்ட சட்டம் இயற்ற வேண்டும்: பிரவீன் தொகாடியா

♈🇮🇳🌴ஆப்ரிக்காவில் ஆறு நாடுகளில் இன்று தேர்தல் நடைபெறுகிறது.

♈🇮🇳🌴இலங்கைக்கு கஞ்சா கடத்திவந்த குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் இருவர், யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

♈🇮🇳🌴கடந்த வெள்ளிக்கிழமை பிரசல்ஸ் நகரில் ஜிகாதி தீவிரவாதி எனும் சந்தேகத்தின் பேரில் சாலாஹ் அப்தஸ்லாம் கைது செய்யப்பட்ட நிலையில், அந்நாட்டுடனான எல்லைப் பகுதிக்கு பிரான்ஸ் கூடுதல் துருப்புக்களை அனுப்புகிறது.

♈🇮🇳🌴இலங்கையில் பெருந்தோட்டங்களை பகிர்ந்தளிப்பதாக இருந்தால், அதைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என அமைச்சர் திகாம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

♈🇮🇳🌴இலங்கையில் பெருந்தோட்டங்களை பகிர்ந்தளிப்பதாக இருந்தால், அதைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என அமைச்சர் திகாம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

♈🇮🇳🌴இலங்கையில் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 65 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டம் தொடர்பில் அண்மைக் காலங்களில் பல்வேறு சர்ச்சைகள் எழுப்பப்பட்டுள்ளன.

♈🇮🇳🌴ஸ்ரீநகர்- ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மீண்டும் துவங்கியது

♈🇮🇳🌴மேற்கு வங்காளத்தில் யானை தாக்கி 4 பேர் பலி

♈🇮🇳🌴மும்பை குப்பை கிடங்கில் தீ: நச்சுப்புகை வெளியேறியதால் பொதுமக்கள் அவதி

♈🇮🇳🌴பிரதமர் மோடி இந்தியாவுக்கு கடவுள் தந்த பரிசு; மத்திய மந்திரி வெங்கையாநாயுடு சொல்கிறார்

♈🇮🇳🌴நாடு கடந்த திபெத்தியர்கள் புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க தேர்தல் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு

♈🇮🇳🌴உத்தரகாண்ட் அரசை கவிழ்க்க பா.ஜனதா சதி ராகுல்காந்தி குற்றச்சாட்டு

♈🇮🇳🌴பிரமாண பத்திரம், செலவு கணக்கு தாக்கல் வேட்பாளர்களுக்கு உதவ தேர்தல் கமிஷன் சிறப்பு ஏற்பாடு

♈🇮🇳🌴அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள பிராங்க்ஸ் அகாடமியில் மேல்நிலை பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வருபவர் அலெக்சிஸ் நசாரியோ (வயது 26) பள்ளி மாணவர்களுக்கு ஊடகம் தொடரபாக பாடம் எடுக்கும் போது  ஐ.எஸ்.தீவிரவாதிகள் தலை துண்டித்து தண்டனை வழங்கும் காட்சி வீடியோவை காட்டி உள்ளார். இதனால் மாணவர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியதாக கூறப்படுகிறது.

♈🇮🇳🌴தெறியில் இரண்டு நாயகிகள் ஒருவர் 'செல்பி'புள்ள, இன்னொருவர் ’குல்பி'புள்ள. விஜய் பேச்சு

♈🇮🇳🌴நடிகர் சங்க புதிய கட்டிடம் மூலம் நடிகர் சங்கத்துக்கு வருடம் ரூ.6 கோடி வருமானம் வரும் அளவுக்கு திட்டம் தீட்டப்பட்டு உள்ளது. நடிகர் சங்க கட்டிடத்தில் 1000 பேர் அமரக்கூடிய பெரிய அரங்கம், சிறிய கல்யாண மண்டபம், பிரிவியூ தியேட்டர், கருத்தரங்கு கூடம், சங்க அலுவலகம், உடற்பயிற்சி கூடம், நடன பயிற்சி கூடம் ஆகியவை அமைய இருக்கிறது. பிரிவியூ தியேட்டர் கட்டும் செலவை சூர்யா, கார்த்தி குடும்பத்தினர் ஏற்றுள்ளனர். கல்யாண மண்டபம் கட்டித்தரும் செலவை ஐசரி கணேஷ் ஏற்று இருக்கிறார்.  கருணாசும், எஸ்.எஸ்.ஆர்.கண்ணனும் முதியோர் இல்லம்
கட்டுவதற்கு இடம் தருவதாக அறிவித்தனர்.பொதுக்குழு கூட்டம் நடந்ததையொட்டி நேற்று படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன.

♈🇮🇳🌴தென் இந்திய சிறந்த நடிகர் கருத்து கணிப்பு அஜித்துக்கு அதிக ஆதரவு

♈🇮🇳🌴வக்கீல் நோட்டீஸ் அனுப்பியதால் பரபரப்பு நடிகை கங்கனா ரணாவத் மனநோயாளியா? ஹிருத்திக்ரோஷன் அறிக்கை

♈🇮🇳🌴யாருடன் கூட்டணி அமைப்பது என்பதில் இன்னமும் தெளிவான முடிவு எடுக்காத என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும் புதுச்சேரி முதல்வருமான என்.ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, பொள்ளாச்சி அருகே உள்ள வேட்டகாரன்புதூர் அழுக்குசாமியார் கோயில் சித்தர் ஜீவசமாதியில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வழிபாடு நடத்தியுள்ளார்

♈🇮🇳🌴கொல்கத்தா,இந்தியா- பாகிஸ்தான் இடையேயான உலக கோப்பை 20 ஓவர் லீக் போட்டி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியின் தொடக்கத்தில் இந்திய தேசிய கீதத்தை பாட பிரபல பாலிவுட் நட்சத்திரமான அமிதாப் பச்சன் பாடினார். அதேபோல்,பாகிஸ்தான் தேசிய கீதத்தை பாகிஸ்தான் பாடகர் ஷபாகத் அமானத் அலியும் பாடினர். தொடர்ந்து போட்டி முடியும் வரை சச்சின் தெண்டுல்கர், தொழில் அதிபர் முகேஷ் அம்பானி ஆகியோருடன் சேர்ந்து அமிதாப் பச்சன் விஐபி கேலரியில் அமர்ந்து போட்டியை ரசித்தார்.இதற்கிடையே, தேசிய கீதத்தை பாடுவதற்காக ரூ 4 கோடி அமிதாப் பச்சன் வாங்கியதாக சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து, அமிதாப் பச்சனுக்கு எதிராக நெட்டிசன்கள் கொந்தளித்தனர். அவரது தேசபக்தி பற்றி கேள்வி எழுப்பிய அவர்கள், கடுமையாக வசைபாடினர். இந்த நிலையில்,  மேற்கு வங்காள கிரிக்கெட் சங்க தலைவர் கங்குலி, அமிதாப் பச்சன் பற்றி  எழுந்த சர்ச்சைகளை மறுத்துள்ளார். இது குறித்து  கங்குலி கூறியதாவது:* அமிதாப்பச்சன் தனிச்சிறப்பு மிக்க நபர். நான் என்றென்றும் அவருக்கு கடமைப்பட்டிருக்கிறேன்.  நிகழ்ச்சிக்காக தனது சொந்த பணத்தில் இருந்து ரூ 30 இலட்சம் செலவு செய்யும் நபரை உங்களால், கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? விமான டிக்கெட், ஹோட்டல் பில், டிக்கெட் போன்றவற்றை தனது சொந்தசெலவில் புக்கிங் செய்து உள்ளார். கொஞ்சம் பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு நான் அமிதாப் பச்சனிடம் கெஞ்சினேன். எனது நேசத்தை வெளிப்படுத்தை இதை நான் செய்கிறேன். இதில் பணம் என்ற ஒரு கேள்வியே எழவில்லை என்று என்னிடம்   கூறி அமிதாப் பச்சன் மறுத்துவிட்டார்” இவ்வாறு கங்குலி தெரிவித்துள்ளார். முன்னதாக, பெங்கால் கிரிக்கெட் சங்கமும், அமிதாப்பச்சன் ஒரு பைசா கூட பெறவில்லை என்று தனது அறிக்கையில் விளக்கி இருந்தது.

♈🇮🇳🌴கேப்டன் பதவியை இழக்கிறார் அப்ரிடி?

♈🇮🇳🌴டோனியின் மகளின் தூக்கத்தை கலைத்த கொண்டாட்டம்

♈🇮🇳🌴இந்தியன் வெல்ஸ்: இந்தியன் வெல்ஸ் பரிபாஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் பெலாரசின் விக்டோரியா அசரன்கா சாம்பியன் பட்டம் வென்றார். ஆண்கள் ஒற்றையரில் செர்பியாவின் ஜோகோவிச் கோப்பையை கைப்பற்றினார். 

♈TODAY'S NEWS...
21:03:2016
🎽🎽🎽🎽🎽🎽🎽

மார்ச் 21 ன் சிறப்புகள்....

🍎🔵உலக காடுகள் தினம்...
🍎🔵உலக கவிதை நாள்..
🍎🔵உலக பொம்மலாட்ட தினம்..
🍎🔵இரவும் பகலும் சமமாக உள்ள தினம்..

🎯🎯கல்வித்தரம் குறைந்து வருவதற்கு அரசு, தனியார் கல்வி நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டு: பாராளுமன்ற குழு அறிக்கை

🎯🎯இந்தியா முழுவதும் 908 ஐ.பி.எஸ். அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளன: மத்திய உள்துறை அமைச்சகம்

🎯🎯பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் முதன் முறையான இந்துக்களின் பண்டிகையான ஹோலிக்கு மார்ச் 24 பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

🎯🎯வாக்குச் சாவடி நிலை அலுவலர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் ரூ.5000/லிருந்து ரூ.6000/-ஆக உயர்த்தப்பட்டுள்ளது...

🎯🎯50 லட்சம் போலி ரேஷன் கார்டு தமிழகம் முழுவதும் புழக்கம்

🎯🎯10ம் வகுப்பு தேர்வு புதிய அறிவிப்பு.
10ம் வகுப்பு அறிவியல் தேர்வு எழுத வரும் மாணவர் அல்லது தனித்தேர்வர் யாராக இருந்தாலும், செய்முறை தேர்வை எழுதியிருக்க வேண்டும். 

🎯🎯கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்களுக்கு 10 மாதங்களாக சம்பளமில்லை...

🎯🎯சத்துணவு வழங்கப்படாததால் மாணவர் வருகை குறைவு ஆசிரியர்கள் சங்கம் புகார்.

🎯🎯சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்தவுடன் காவல்துறையில் காலியாக உள்ள 19,157 பணியிடங்களை நிரப்ப வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.

🎯🎯பிளஸ் 2 தேர்வில் இன்று நடக்கவுள்ள கணினி அறிவியல் தேர்வில், நான்கு வகை வினாத்தாள் வழங்கப்பட உள்ளது.

🎯🎯அறிவியல் ஆய்வகம் இல்லாத அரசு பள்ளிகளை கணக்கெடுக்க வேண்டும் என்று, முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது

🎯🎯பிளஸ் 2 தேர்வு கடினம்: பி.இ., 'சீட்' கிடைக்குமா?

🎯🎯4.50 லட்சம் தபால் ஓட்டுகள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

🎯🎯மாதம் ரூ.3,000 சம்பளத்தில் முழுநேர பணி அரசுபள்ளி துப்புரவு பணியாளர்கள் கொதிப்பு.

🎯🎯ஆறு வயதில் சாலை விழிப்புணர்வு பாடம்: விபத்தில்லாமல் ஆயுளுக்கும் தொடரும்
உடுமலை ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவி ஜீவிதா, எந்தெந்த குறியீடுகளுக்கு சாலைகளில் வாகனங்களை எவ்வாறு இயக்க வேண்டும்.வேகத்தை கட்டுத்த வேண்டிய இடம்,வளைவுகள் என பலருக்கும் தெரியாத சாலை பாதுகாப்பு வடிவங்களைக் கூட தவறாமல் கூறுகிறார்.

🎯🎯பிளஸ் 2 விடைத்தாள் மதிப்பீட்டு பணி: புறக்கணிக்கும் ஆசிரியர்களால் அவதி.

🎯🎯பிளஸ் 2 தேர்வு தாமதம்: தேர்வுப் பணியிலிருந்து தலைமை ஆசிரியர் நீக்கம்

🎯🎯இளம் மாணவர்கள் விவசாய படிப்பில் சேருவதை குறிகோளாக வைத்து கொள்ள வேண்டும்விவசாய கல்லூரி டீன் பேச்சு

🎯🎯தி ஹிந்து ஆங்கில நாளிதழ் ஓவிய போட்டியில் இறுதி சுற்றில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவிகள்
♈🇮🇳🌴🌴🌴🌴🌴🇮🇳♈

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth