தினம் ஒரு குட்டிக்கதை.
ஒரு திருவிழா கூட்டத்தில் ஒரு குழந்தை அழுதுகொண்டிருந்தது. யாரும் பொருட்படுத்தாத நிலையில் ஓர் இளைஞன் அதை கவனித்தான். மெல்ல அக்குழந்தையிடம் சென்று ஏன் அழுகிறாய? என்றான். இப்போது அழுகை சற்று அதிகமானதை அவனால் உணர முடிந்தது. குழந்தையை தன் மார்போடு இருத்தி கொஞ்சம் ஆசுவாசப்படுத்தியபடி மீண்டும் கேட்டான், ஏன் அழுகிறாய்? அழுகையை கட்டுப்படுத்தியவாறே, "என் அம்மாவை காணோம்" என்றது குழந்தை.
உன் அம்மா எப்படி இருப்பார்கள? என்றான் அவன். ரொம்ப அழகா இருப்பாங்க என்றது குழந்தை.
இளைஞன் குழந்தையை தூக்கிக்கொண்டு திருவிழா கூட்டத்தில் நுழைந்து அங்கிருந்த அழகிய பெண்களையெல்லாம் காட்டி இதுவா உன் அம்மா என கேட்கத் தொடங்கினான். குழந்தையிடம் ம்ஹூம் மட்டுமே பதிலாக வந்தது. ஒரு கடையின் அருகே போனபோது குழந்தை அம்மா என கூவியது.
அவன் அத்திசையில் பார்த்தபோது, அருவறுக்கத்தக்க தோற்றமுடைய ஒரு பெண் குழந்தையை நோக்கி தன் கரங்களை நீட்ட குழந்தை அவள் கைகளில் தாவிக்கொண்டது. இப்போது அழுகயின் தடம் மறைந்து குழந்தை புன்னகைத்தது.
இளைஞனுக்கு ஓர் உண்மை புரிந்தது. அழகு என்பது பெண்ணின் உடலில் அல்ல, அது அன்பு, பாசம், கருணை, பரிவு, தாய்மை, தியாகம் முதலிய குணங்களில் தொக்கி நிற்கிறது என்பதே அது.
என்னைக் கவர்ந்த சிறுகதைகளில் இதுவும் ஒன்று... KING 👑
Comments