திருச்செங்கோட்டில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி பேராசிரியர்கள் மகாதேவன், செந்தில் குமார், ஜெகதீசன். ஆய்வக உதவியாளராக தியாகராஜன் இருந்தார்.
நேற்று இரவு அவர்கள் 5 பேரும் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கல்லூரி சம்பந்தமாக காரில் புறப்பட்டனர். டிரைவர் பாபு காரை ஓட்டினர்.
இன்று அதிகாலை 6 மணி அளவில் கார் சுங்குவார் சத்திரத்தை அடுத்த தண்டவேலூர் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு லாரியின் பின்பக்கத்தில் பயங்கரமாக மோதியது.
இதில் காரில் இருந்த மகாதேவன், செந்தில்குமார், தியாகராஜன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். ஜெகதீசன், டிரைவர் பாபு ஆகியோர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சுங்குவார்சத்திரம் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்த ஜெகதீசன் சென்னை அரசு ஆஸ்பத்திரியிலும், பாபு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜெகதீசனின் நிலைமை மோசமாக உள்ளது.
பலியான 3 பேரின் உடல்களும் ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
Comments