விஜய் மல்லையா விடுதலை.....
விஜய் மல்லையா வின் வழக்கறிஞராக Mr.Citizen ஆகிய நான் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிட்டதில் சில முக்கிய பகுதிகள்....
Point No 1
என் கட்சிக்காரர் பலமுறை கடனைத் திருப்பிச் செலுத்த ஸ்டேட் பேங்க் பெங்களூர் கிளைக்கு வந்த போது எல்லாம் அவருடைய ஏரோபிளைனை நிறுத்தவோ, சொகுசு படகினை நிறுத்தவோ பார்க்கிங் வசதி இல்லாமல் திரும்பிப் போய் உள்ளார்... ஒரு பெரிய கஸ்டமருக்கு தேவையான இது போல அடிப்படை வசதிய கூட செஞ்சு தராதது யார் தப்பு யுவர் ஹானர்...? பேங்க் காரங்க தப்பு
Point No 2
அப்படியும் போனாபோகுது என்று கவுரவம் பார்க்காமல் 10 பேர் உட்காரக் கூடிய காரில் பெண்ணுரிமையைப் போற்றிப் பாதுகாக்கும் விதமாக 15 இளம் பெண் உதவியாளர்களையும் ஏற்றிக் கொண்டு,இடித்து நெரித்துக் கொண்டு, வெயில் கொடுமைக்காக மிகக் குறைவான உடைகளோடு, கஷ்டப்பட்டு பேங்கிற்கு வந்தால் அங்க இருக்குர அத்தன பேரும் அந்த பொம்பள புள்ளைங்களையே வச்ச கண்ணு வாங்காம பாக்குறானுங்க யுவர் ஹானர். என் கட்சிக்காரர் அவர் கடன கட்டறத விட பெண் தெய்வங்கள பாதுகாக்குறது தான் முக்கியம்னு கடன கட்டாம திரும்பி போயிட்டார் யுவர் ஹானர். இது யார் தப்பு யுவர் ஹானர்? சமுதாயத்தோட தப்பு
Point No 3
அப்பறம் யுவர் ஹானர்.... என் கட்சிக்காரர் பாராளுமன்ற எம்.பி. எல்லா எம்.பியும் மக்கள் பணத்த கொள்ளை அடிக்கும் போது லஞ்சமா வாங்கும்போது என் கட்சிக்காரர் அத கடன்னு வேற பேர்ல வாங்குனாரு யுவர் ஹானர். எந்த எம்.பியும் மக்கள்ட்ட பணத்த திருப்பி கொடுக்காத போது என் கட்சிக்காரர் கிட்ட மட்டும் பணத்த திரும்ப கேக்குறது சட்டத்திற்கு எதிரானது யுவர் ஹானர்...
Point No 4
உப்பு சப்பு இல்லாத பிரச்சினைக்கு எல்லாம் நாட்ட உட்டு வெளிய போறேன் நாட்ட உட்டு வெளிய போறேன் ன்னு அடிக்கடி வெளிக்கு போறாமாதிரி சொல்லும் போது என் கட்சிக்காரர் வெறும் செயல்ல மட்டும் காட்ட விரும்பாம எல்லாருக்கும் முன்னுதாரணமா செஞ்சே காட்டுன உத்தமன் யுவர் ஹானர்.... இப்படி எல்லாரும் அவர் காட்டுன வழில நடந்தா நாட்டுல மக்கள் தொகை பிரச்சினை உடனே இல்லாம போய்டும் யுவர் ஹானர்... இது தவறா யுவர் ஹானர்?
Point No 5
என் கட்சிக்காரர் யாருக்காக கடன் வாங்குனாரு யுவர் ஹானர்? நமக்காகதான நம்ம சந்தோசத்துக்காகத்தான? கூலிங் பீரா செஞ்சு அவர் மட்டுமா குடிச்சாரு? நம்ம பயபுள்ளைங்களுக்குத்தானே கொடுத்தாரு? என் கட்சிக்காரர் அரஸ்ட் ஆகிட்டா பீர் குடிக்காம நம்ம நாட்டோட எதிர்காலம் என்ன ஆகும்னு யோசிச்சு பாருங்க யுவர் ஹானர்.... நம்ம சந்தோசத்துக்காகத்தான காடு மலை கடல் ஆறுன்னு கஷ்டப்பட்டு போய் பொம்பளபுள்ள படமா போட்டு காலண்டர் அடிச்சு கொடுத்தத மறக்கலாமா யுவர் ஹானர்?
.....
.....
.....இப்படி ஆணித்தரமாக வாதங்களை முன் வைத்துக் கொண்டு இருக்கும் போதே மேற்கொண்டு எதையும் கேட்க விரும்பாமல் கணம் கோர்ட்டார் அவர்கள் "குமாரசாமி கால்குலேட்டரை" தட்டிப்பார்த்து, எனது கட்சிக்காரர் விஜய் மல்லையாவை இபிகோ சட்ட்பிரிவு எதுலையுமே தண்டிக்க வழியில்லைன்னு 2 வரியில் தீர்ப்பு சொல்லி விடுதலை செய்து விட்டார்.
இது போன்ற சட்ட ஆலோசனை மற்றும் உதவிக்கு தயங்காமல் அணுகவும்...
........ மக்கள் சேவையில் என்றும்
Comments