கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்

கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்

- ஒரு ஆலயத்தில் இருந்து கொண்டு மற்ற ஆலயத்தைப்பற்றி புகழ்ந்து பேசக்கூடாது

- கோவில்களில் பிரஸாதமாக தரப்படும் துளசியை தலையில் வைத்துக் கொள்ளக்கூடாது

- ஒரே சமயத்தில் இரண்டு கைகளாலும் தலையைச் சொறியக் கூடாது

- உடம்பிலிருந்து உதிர்ந்த மயிரையும், வெட்டிய நகத்தையும், வீட்டில் வைக்கக் கூடாது . உடனே வெளியே எரிந்து விட வேண்டும்

- நாம் உடுத்திய பழைய துணிகளை வீட்டின் கதவுகளின் மீது போடக்கொடாது

- ஆலயத்தில் தெய்வ விக்ரஹத்தை தொட்டு பூஜை செய்யும் அர்ச்சகரை தவிர மற்றவர்கள் கையால் வீபூதி குங்குமம் முதலிய ப்ரஸாதத்தை பெற்றுக்கொள்ள கூடாது

- விஷ்ணு ஆலயங்களில் பெருமாள் தீர்த்தத்தை இரண்டு கைகளாலும் பெற்றுக்கொண்டு, பாதியை சாப்பிட்டு விட்டு, மிச்ச ஜலத்தை தலையில் தடவி (தெளித்து) க் கொள்ளக்கூடாது. (தனியாக ஜலம் வாங்கி தலையில் ப்ரோஷித்துக் கொள்ளலாம்)

- ஈரத்துணியை உடுதிக்கொண்டோ, குளிக்காமலோ, எந்த ஒரு ஆலயத்தின் உள்ளேயும் செல்லக்கூடாது

- வீதிகளில் சுவாமி உலாவரும் போது ஸ்வாமியை பிரதஷிணம் செய்யக்கூடாது (நமஸ்காரம் மட்டும் செய்யலாம்)

- ஆலயத்துக்குள் எந்த ஒரு தனி மனிதனையும் நமஸ்காரம் செய்யக்கூடாது

- இரண்டு கன்னங்களிலும் கைகளை வைத்துக்கொண்டு நிற்பதோ , உட்கார்ந்து கொள்வதோ கூடாது

- திருமணம் போன்ற மங்கள நிகழ்ச்சிக்கு சென்று வந்தவுடன் குளிக்க கூடாது

- அபிஷேகம், பூஜை, ஜபம், ஹோமம் முதலிய தெய்வ காரியங்களை செய்யும் போது கைலி (லுங்கி ) கட்டிக்கொள்ள கூடாது

- ஈரத்துணியை உடுத்திக்கொண்டு உணவு அருந்தக்கூடாது

- சாப்பிடும் அன்னத்தை உருண்டையாக உருட்டி சாப்பிடக்கூடாது

- வபனம் (ஷேவ் ) செய்து கொள்ளும் முன்பு எதுவும் சாப்பிடக்கூடாது

- தாய் தந்தை உள்ளவர்கள் ஒருபோதும் வெள்ளிக்கிழமையன்று ஷவரம் (ஷேவ் ) செய்துக்கொள்ள கூடாது

- பெண்கள் கோவிலில் அங்கப்ரதக்ஷிணம் செய்யக் கூடாது (பெண்களின் மார்பு பகுதி பூமியில் படக்கூடாது)

- பெண்கள், மஞ்சள் நூல் கயிற்றில் மட்டுமே திருமாங்கல்யத்தை கோர்த்து அணிந்து கொள்ள வேண்டும்

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth