இந்திய சுதந்திரம் பெற்ற பின்பு 1947-50 க்கு இடையில் ஒரு சிறிய சம்பவம்

இந்திய சுதந்திரம் பெற்ற பின்பு 1947-50 க்கு இடையில் ஒரு சிறிய சம்பவம் நடந்தது. இந்திய அரசாங்கம் அமைவதற்கு அரசியல் சட்டம் தேவைப்பட்டது. அந்த அரசியல் சட்டத்தை உருவாக்குவதற்கு அரசியல் நிர்ணய சபை அமைக்கப்பட்டது. அதற்காக 90க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள சட்டங்களை இரவு பகலாக படித்து தனது உயிரையே அதில் கரைத்து இந்த நாட்டில் அரசியல் சட்டம் உருவாவதற்கு காரணமாக அமைந்தவர் பெருமைக்குரிய மாமேதை அம்பேத்கார் அவர்கள்.

அந்த அரசியல் சட்டத்தில் பாராளுமன்றம் எப்படி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.. பிரதம மந்திரி எப்படி தேர்ந்தெடுக்கப் படவேண்டும்... உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முதல் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் வரை எப்படி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்... என்று அரசியல் சட்டம் தெளிவாக வரையரைத்துள்ளது. அப்படி தேர்ந்தெடுக்கப் படுவதை தீர்மானிக்கிற பொழுது... தேர்ந்தெடுப்பதற்கான வாக்குரிமையை யார் யாருக்கு வழங்க வேண்டும் என்று அரசியல் நிர்ணய சபையில் விவாதம் நடத்தப் படுகிறது.
.
1920 ஆம் ஆண்டிலேயே ஆங்கிலேயர்கள் நம் நாட்டில் பொதுத் தேர்தல் நடத்தினார்கள். 1920 முதல் 1942 வரை நடத்திய பொதுத் தேர்தல்களில் ஆங்கிலேயர்கள் எல்லா இந்தய குடிமகன்களுக்கும் வாக்குரிமையை கொடுக்கவில்லை. ஏனென்றால் அடிமைகளுக்கு வாக்களிக்கும் உரிமை இல்லை என கருதினார்கள். வருமான வரி செலுத்துகிறவர்கள், பணக்கார்கள், நிலபிரபுக்கள், ஜமீன்தார்கள், எழுதப் படிக்கத் தெரியாத ராஜாக்கள், ICS படித்தவர்கள், பாரத் லா படித்தவர்கள் என சில குறிப்பிட்ட இந்தியர்களுக்குத் தான் ஆங்கிலேயர்கள் வாக்குரிமை கொடுத்து இருந்தார்கள்.
.
1947 சுதந்திரத்துக்கு பிறகு யாருக்கெல்லாம் வாக்குரிமை அளிக்கப்பட வேண்டும் என்று அரசியல் நிர்ணய சபையில் விவாதம் வந்த பொழுது எழுத படிக்க தெரிந்த எங்களுக்கு தான் வாக்குரிமை அளிக்கப் பட வேண்டும் என்றார்கள். அன்றைக்கு இந்தியாவின் மக்கள் தொகை 40 கோடி. அதில் 30% க்கும் குறைவானவர்கள் தான் எழுத படிக்கத் தெரிந்து இருந்தார்கள். ஆகா மீதி இருந்த 70% க்கும் அதிகமான எழுத படிக்க தெரியாத, பணம் சம்பாதிக்காத, வருமான வரி செலுத்தாத, ஏழை இந்தியனுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப் படக்கூடாது என்று பெரும் குரலில் கூச்சலிட்டார்கள்.
.
வாக்குச் சீட்டை பார்த்து படிக்கத் தெரியாதவனுக்கு ஏன் வாக்குரிமை கொடுக்க வேண்டும் என்று கேட்டு சண்டை போட்டு கூச்சல் எழுப்பிய போது ஒரே ஒரு குரல் மட்டும் இந்தியாவில் உள்ள அனைவருக்கு ஏழைக்கும் வரி செலுத்தாதவனுக்கும் படிக்காதவனுக்கும் வாக்களிக்கும் உரிமை வேண்டும்... அவனுக்கு இந்தியன் என்ற ஒற்றைத் தகுதி போதும் வாக்களிக்க என்றது. அந்த குரல் மாமேதை அம்பேத்கார் அவர்களின் குரல்.
.
ஆக சும்மா கிடைக்கவில்லை வாக்குரிமை. போராடிப் பெற்ற சுதந்திரத்தையும் வாக்குரிமையையும் நம் சரியாக பயன்படுத்த வேண்டும். 18 வயது அடைந்த ஒவ்வொரு மாணவ மாணவிகளும் வாக்களிக்க வேண்டும். 100% வாக்களிக்க வேண்டும் என்று சொல்ல வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். வாக்களிப்போம். வாக்களிப்போம்...!

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth