சென்னை புத்தக திருவிழாவிற்கு இன்னும் 58 நாட்கள் தான்.

#‎வாசித்ததைப்‬பகிர்வோம்,
பகிர்வதற்காக வாசிப்போம்#

சென்னை புத்தக திருவிழாவிற்கு இன்னும் 58 நாட்கள் தான்.

ஜுன் 1 முதல்சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 39 ஆவது புத்தக கண்காட்சி.

அதுவரை நுாறு  புத்தகங்கள் அறிமுகம் செய்வது என்கிற முயற்சியில் இது 12 ஆவது புத்தகம்

"கொலைக்களங்களின் வாக்குமூலம்".

பேராசிரியர் அருணன் எழுதி வசந்தம் வெளியீட்டகம் வெளியிட்ட வரலாற்று இலக்கிய புலனாய்வு நுால்.

தமிழர்களுக்கு வரலாற்று அக்கறை கிடையாது என்கிற பழிச்சொல் உள்ளது.

படித்தவர்கள் பதிவு செய்யாவிட்டாலும் பாமரர்கள் வரலாற்று நாயகர்களை குல தெய்வங்களாக நினைவு படுத்துகிறார்கள்.

தெய்வ மூடியை அகற்றிவிட்டு அதன் சரித்திர முகத்தை பார்க்க உதவும் நுால்.

அப்படி தெய்வ வடிவாக மாறிப்போன நந்தன், காத்தவராயன், மதுரைவீரன், முத்துப்பட்டன் என அத்தகைய மனிதர்களின் சரித்திர முகம் இதில்.

சிதம்பரத்தில் போய் தில்லையாண்டவரைப் பார்ப்பேன் எனச் சொல்லிப்போய் அந்தனர்களின் சூழ்ச்சியால் தீயில் மாண்டுபோன நந்தனின் வரலாறு புதிய பார்வையில்.

நந்தியை தள்ளி இருக்கச்சொன்ன சிவபெருமான் நந்தனை உள்ளே அழைக்கவில்லை என்கிற ஏக்கம் வருகிறது இந்நுாலை வாசிக்கையில்.

சிதம்பரம் கோவிலில் நந்தன் நுழைந்ததால் அடைக்கப்பட்ட வாசல், நந்தன் வெட்டிய குளம், நந்தனார் தீயில் கருகிய மர்மம் என் வரலாற்று ஆய்வுப் பாதையில் இந்நுால்.

அந்தனர் பெண்ணை காதலித்து மணதம் செய்த காத்தவராயன், பிராது சொன்ன அந்தனர்களின் தண்டனையால் கழுகுமரத்தில் ஏற்றப்பட்டதும், 

மதுரை கள்ளர்களை அடக்கிய மதுரைவீரனின் காதல்,வீரம், பெண் மோகம் என்பதுடன்  மதுரை வீரனின் சர்ச்சைக்குறிய  அவன் மரணத்தின் மர்மத்தினை பேசுகிறது இந்த நூல்.

தன் குடுமியையும் பூனுாலையும் அறுத்தெறிந்து மாற்று சாதி பெண்களை திருமணம் செய்த முத்துப்பட்டன் கதையும் வரலாற்று நோக்கில் ஆய்வு செய்யப்படுகிறது.

புத்தக வாசிப்பிற்கு பின் மதுரை வீரனாக மனக்கண்ணில் நின்ற எம்ஜிஆரும், காத்தவராயனாக ஆரியமாலாவை காதலித்த சிவாஜிகணேசனும் மறைந்து அவர்களின் வாழ்வில் நடைபெற்ற சாதீய ஒடுக்குமுறை  மனக்கண்ணில் விரிகிறது.

குல தெய்வங்களாக்கி வரலாற்றில்“ மறைக்கப்பட்ட நிகழ்வுகளை அதன்  தெய்வ மூடியை அகற்றிவிட்டு சரித்திர முகத்தைப் பார்க்க 

வாசிங்க, 
வாங்குங்க.

பிரசுர தலைப்பு

” கொலைக்களங்களின் வாக்கு மூலம்”

எழுதியவர்:-  பேராசிரியர் அருணன்
வசந்தம் பதிப்பகம்
விலை ரூபாய்120

#வாசித்ததை பகிர்வோம்,
பகிர்வதற்காக வாசிப்போம்#

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth