சித்திரை திருமகள்

சித்திரை திருமகள் ,எல்லோருக்கும் நல்லமகள் ,
வாடைக்கும் கோடைக்கும் நடுவே நின்று சிரிக்கும் மகள் ,
வசந்தத்தை அழைத்து வந்து வளம் கூட்டும் நல்ல மகள் ,
கொன்றைப்பூ வைத்து கண்ணாடியில் கனி காணும் கன்னிமகள் ,
முக்கனியின் சுவை பேசி ,வேம்பின் மகத்துவம் பேசி ,
வாழ்வின் தத்துவம் பேசும் தங்க மகள் ,
தமிழுருவாய் வந்தாளே தரணிஎல்லாம் தழைத்திடவே !
அனைவர்க்கும் கனிவான தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் !

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth