நானும் என் நண்பனும் பாரில் ஆர்டர் செய்துவிட்டுக் காத்திருந்தோம்தினம் ஒரு குட்டிக்கதை.

👬நானும் என் நண்பனும் பாரில் ஆர்டர் செய்துவிட்டுக் காத்திருந்தோம் அப்போது அருகில் ஒருவர் ஃபோனில் பேசிக்கொண்டு இருந்தார். ஸ்பீக்கர் ஆனில் இருந்த்தால் மறுமுனையில் பேசிய அவர் 👩மனைவியின் குரல் தெளிவாக கேட்டது.

"ஏங்க…நான் இப்ப ஷாப்பிங் மால் உள்ளே இருக்கேன். நான் சொன்னேனே.. 📷டிஜிட்டல் கேமரா.. இங்க இருக்குங்க... 💰இருபதாயிரம்தான் விலை.
வாங்கிகட்டுமா...?"

"வாங்கிக்க...!"☺

"அப்புறம்... நான் கேட்டேனே ஒரு
💎வைர நெக்லஸ்... அதுவும் இங்க இருக்குங்க... விலைதான் 💰ஒண்ணரை லட்சம் சொல்றான்..."

"ஒண்ணரை லட்சம்தான... உனக்கு பிடிச்சிருந்தா வாங்கிக்க...😊!"

“அப்புறம் ஒரு புடவை 💁 பார்த்தேன் ரொம்ப காஸ்ட்லியா சொல்றான்”

“ரேட்ட பார்க்காதேமா உனக்கு புடிச்சி இருந்தா வாங்கிறுமா 😏”

"ஏங்க... அப்புறம் நாம பார்த்தமே ஒரு கார் 🚘... இப்ப  ஆஃபர் போட்டிருக்காங்க... விலை 💰பதினெட்டு லட்சம் சொல்லறான்... உங்க செக் இருக்கு குடுத்துறவா..?"

"ஓகேமா…… இதுலாம் கேக்கலாமா உனக்கு புடிச்சிருந்தா போதும ்😇 "

"ஓகேங்க... சீக்கிரம் விட்டுக்கு வாங்கன்னு ..." என்று கொஞ்சலாய்ச் சொல்லிவிட்டு மறுமுனையில் ஃபோனை வைத்தாள் மனைவி.

இவரும் ஃபோனைச் சிரித்தபடியே வைத்துவிட்டுத் திரும்பினார்.

ஒரே நாளில் இவ்வளவு பர்ச்சேஸா... நாங்கள் மிரண்டு போய்ப் 😳 பார்த்துகொண்டிருக்க, எங்களை பார்த்து சிரித்தபடியே 😆 கேட்டாரே ஒரு கேள்வி….

"யாரோட மொபைல்ங்க 📱 இது..?".
் 😝😝😜😛😛😛😜😝😝

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth