மறதி தேசிய வியாதி மட்டுமல்ல மக்களுக்கு தேர்தல் வியாதியும் கூட........ .

மறதி தேசிய வியாதி மட்மல்ல

மக்களுக்கு #தேர்தல்_வியாதி யும் கூட........
.
1)அரசு பேருந்து கட்டண உயர்வை மறந்தாச்சு
.
2)3000கோடி வாட் &சேவை வரியை நம் தலையில் ஏற்றியதை மறந்தாச்சு
.
3)3முறை மின்சார கட்டண உயர்வை மறந்தாச்சு
.
4)பல முறை பால் கட்டண உயர்வை மறந்தாச்சு
.
5)ஆம்னி பேருந்து கட்டண உயர்வை மறந்தாச்சு
.
6)ஆட்டோ கட்டண உயர்வை மறந்தாச்சு
.
7)பத்திரபதிவு & பத்திர விலை உயர்வை மறந்தாச்சு
.
8)நிலவரி உயர்வை மறந்தாச்சு
.
9)டெங்கு மரணங்களை மறந்தாச்சு
.
10)குழந்தைகள் & பெண்கள் மீதான பாலியல் கொலை,கற்பழிப்புகளை மறந்தாச்சு
.
11)ஆவின் பாலில் தண்ணீர் கலந்ததை மறந்தாச்சு
.
12)ஜெயலலிதா ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்றதை மறந்தாச்சு
.
13)முட்டை ஊழலை மறந்தாச்சு
.
14)கிரானைட் ஊழலை மறந்தாச்சு
.
15)மின்கொள்முதல் ஊழலை மறந்தாச்சு
.
16)போக்குவரத்து தளவாட ஊழலை மறந்தாச்சு
.
17)மதுவுக்காக கொல்லபட்ட சசிபெருமாளை மறந்தாச்சு
.
18)டிஸ்பி விஷ்ணணுப்ரியா தற்கொலையை ??? மறந்தாச்சு
.
19)தர்மபுரி இளவரசனின் சாதி வெறி கொலையை மறந்தாச்சு
.
20)காரணமில்லாம நடந்த அமைச்சரவை மாற்றத்தை மறந்தாச்சு
.
21)1000கோடி பீனிக்ஸ் தியேட்டர்களை ஜெயா-சசிகலா குரூப்ஸ் வாங்கியதை மறந்தாச்சு
.
22)சத்யம் சினிமாஸ் சசிகலா குரூப் வாங்கியதை மறந்தாச்சு
.
23)செம்பரபாக்கம் ஏரி திறப்பால் பல ஆயிரம் உயிர்,உடமை போனதை மறந்தாச்சு ..25 வருட மக்களின் உழைப்பை ஒரே இரவில் நாசமாக்கியதை 5000 ரூபாய் பணத்தால் மறச்சாச்சு,மறந்தாச்சு

.
24)காசுக்கு குடிநீரை விற்றதை மறந்தாச்சு
.
25)பல மணி நேர மின்வெட்டை மறந்தாச்சு
.
26)முதியோர் உதவி தொகை,
.
27)விதவை உதவி தொகை உள்ளிட்ட அரசு சலுகை நிறுத்தபட்டது மறந்தாச்சு
.
28)Ration Card புதுப்பித்தல் (Smart Card ) மறந்தாச்சு
.
அதிமுக 2011 தேர்தல் அறிக்கையில் சொல்லபட்டவை
.
1)சென்னை அருகே துணை நகரம்,
.
2)தமிழகம் முழுக்க மோனோ ரெயில்,
.
3)50ரூபாய்க்கு கேபிள் டிவி,
.
4)58வயதுக்கு மேற்பட்டோர்க்கு இலவச பஸ் பாஸ்,
.
5)சுத்தகரிக்கபட்ட இலவச 20லிட்டர் குடிநீர் அறிவிப்பு,
.
5)3மாதத்தில் மின்வெட்டு நீக்கப்படும்,
.
6)விலைவாசி குறைக்கப்படும்னு போன்ற பல அறிவிப்புகள் மக்கள் மறந்து போச்சு
.
ஆனா தேர்தலுக்கு தேர்தல் ஒட்டுக்கு பணம் வாங்க மட்டும் மறப்பதில்லை.

கருத்து கணிப்பு என்ற பெயரில் ஊடகம் தோறும் உதார்விட்டு கருத்து திணிப்பு  பார்த்து பரவசப்படுவதை மறப்பதில்லை.

ஏப்ரல் 1 வேண்டுமானால் முட்டாள்தினமாய் இருக்கலாம்

ஆனால் மே 16 அடிமுட்டாள் தினமாய் ஆகாமலிருந்தால் நிம்மதி

ஐந்தாண்டுக்கு ஒரு முறை வரும் தேர்தலில் அரசியல் வாதிகள் ஜெயிக்கிறார்கள்

ஆனால் அனுதினமும் மக்கள்தான் தோற்றுக்கொண்டே இருக்கிறார்கள்....

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth