ஆசிரியர்-மாணவர் உறவு மேம்பட!
#ஆசிரியர்-மாணவர் உறவு மேம்பட!
பெரும்பாலும் வகுப்பறை தோல்வியடைவதற்கு காரணம்
எல்லாரிடமும் நாம் ஒரே மாதிரியான செயல்பாடுகளையே
நாம் எதிர்பார்க்கிறோம். அங்கே உள்ள குழந்தைகள்
வித்தியாசமானவர்கள் என்பதை மறந்து.
அறிவியல் தன்மை தான் ஒரே மாதிரியாக இருக்குமே தவிர
கலை என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபட்டது.
வகுப்பறையில் போதிப்பது என்பது ஒரு கலை அங்கே
கற்பவர்களும் கலைத்துவம் மிக்கவர்களே!
ஏன்? அறிவியல் வாத்தியாராக இருந்தாலும் கூட
அவர் கற்றுகொடுப்பது ஒரு கலை என்பதை மறக்க கூடாது.
வகுப்பறையில் ஆர்வமானவர்களை தேடுவதை விட அவர்களின் ஆர்வமின்மைக்கு காரணத்தை கண்டுபிடித்து அதை களைந்து, ஆர்வத்தை தூண்டுவதும்,அவர்களின் ஆர்வத்தை அறிந்து அதை போதிபதுமே சிறந்த கல்விமுறையும் கூட அப்படி போதிக்கும் ஆசிரியர்களே! இறவா புகழை அடைகிறார்கள்!
இன்றையை கால சூழலில் அது அருகி வருகிறது!
Comments