இதோ... என் இனிய...எளிய...
இதோ... என் இனிய...எளிய...
தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்!
துர்முகி பிறக்கட்டும்!
தூயஅரசு அமையட்டும்!
துயரங்கள் தொலையட்டும்!
துன்பங்கள் விலகட்டும்!
துவண்டுகிடக்கும் தமிழகம்
துடிப்புடனே நிமிரட்டும்!
அசுத்தங்கள் அகலட்டும்!
ஆணவங்கள் அழியட்டும்!
மாற்றங்கள் மலரட்டும்!
மக்கள்தம் வாழ்வினிலே
மறுமலர்ச்சி காணட்டும்!
மகிழ்ச்சியில் திளைக்கட்டும்!
எல்லோர்க்கும்
கல்வி கிடைக்கும்!
எல்லோர்க்கும்
வீடு கிடைக்கும்!
எல்லோர்க்கும்
உணவு கிடைக்கும்!
எல்லோர்க்கும்
எல்லாம் கிடைக்கும்!
அதுவரை
நம்போர் நடக்கும்!
தமிழ் மணத்துடனும்
தங்க மனத்துடனும்
வாழ்த்துவது...
Comments