ஆந்திரா அரசு செய்த சாதனை

ஆந்திரா அரசு செய்த சாதனை

கோதாவரி - கிருஷ்ணா நதி நீர் இணைப்பு திட்டம்
கால்வாய் நீளம் - 174 KM
திட்ட செலவு - 1300 கோடி
தொடங்கப்பட்ட ஆண்டு - மே மாதம் 2014
முடிக்கப்பட்ட ஆண்டு - செப்டம்பர் 2015

இது தமிழகத்தின் கதை

காவிரி வைகை இணைப்பு திட்டம்
கால்வாய் நீளம் - 225 KM
திட்ட செலவு - 2800 கோடி
தொடங்கப்பட்ட ஆண்டு - 2008
முடிக்கப்பட்ட ஆண்டு - ??????? (முடிச்சா தான)

திட்டம் முடிக்கப்படாததிற்கு தமிழக அரசு சொல்லும் காரணம் நிதி இல்லை!

நிதி இல்லைனா திட்டம் போடறது எதுக்கு மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கவா?? கொஞ்சம் யோசிங்க!!

ஆனால் தமிழக அரசு 2012 -13 ஆம் ஆண்டு செலவிட்ட தொகைகள்

இலவச லேப்டாப் திட்டம் 10,000 கோடி ..

இலவச மின்விசிறி, கிரைண்டர் திட்டம் 1250 கோடி..

இலவச வேட்டி சேலை 300 கோடி..

சரி நம்ம மக்களும் அடுத்த தேர்தலுக்கு பிரிஜ், வாஷிங் மெசின் தருவாங்களான்னு வாய பொளந்து காத்துட்டு இருக்கற கூட்டம் தான !!

நமது தேசத்தை பாழ்படுத்தியது இந்த இவவசங்கள் தான் .

நதிய இனைச்சா என்ன?

விவசாயம் செத்தா என்ன ?

சிவகார்த்திகேயன அடிச்சுபுட்டாங்கலாம்ல ??

நயன்தாரா இப்ப யார காதலிக்கரா??

அது என்ன மேட்டர்ன்னு அலசி ஆராய்ச்சி மட்டும் பன்றாங்க.

தயவு செஞ்சு யோசிங்க மக்களே நாம் எதுக்காக ஓட்டு போடறோம்… ?

ஜெயிச்சதுக்கு பின் அரசியல்வாதி என்ன செய்யனும்?
அரசாங்கம் என்ன செய்யனும்?

அவுங்க யாரோட காச செலவு பன்றாங்க?
நம்மகிட்ட பல வழிகளில் பெறப்பட்ட வரிப்பணம்..

தாமிரபரணி ஆற்று நீரை பெப்சி கம்பெனி க்கு 99 ஆண்டுகளுக்கு எடுக்கும் உரிமையை விற்றது தான் பெரும் சாதனை.

விழித்திடுவோம் மாற்றத்தை நோக்கி

மாற்றங்கள் நம்மிடம் முதல் துவங்கட்டும்.

தமிழகம் முழுவதும் இந்த செய்தி எட்டுத்திக்கும் பரவட்டும். மாற்றம் வரும் கண்டிப்பாக.

2016 உருவாக்குவோம் புதிய அரசியல் வரலாறு.....!

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth