ஒரு ஊரில் உள்ள விவசாயி மக்கள் ஓர் ஆட்டுப்பட்டி வைத்திருந்தனர்...
ஒரு ஊரில் உள்ள விவசாயி மக்கள் ஓர் ஆட்டுப்பட்டி வைத்திருந்தனர்...
அதைக் கண்டு அங்கு வந்த ஒரு ஓநாய் அந்த ஆடுகளை கொன்று திங்க ஆரம்பித்தன. அதைக் கண்ட விவசாயிகள் அந்த ஓநாயை விரட்டி துரத்தினர்.
ஓநாயை விவசாயிகள் விரட்டிய நேரம் ஆட்டுப்பட்டியின் ஆடுகளை அங்கு வந்த நரி கொன்று தின்ன ஆரம்பித்தது.
இதை கேள்விபட்ட விவசாயிகள் துரத்தி வந்த ஓநாயை விட்டு விட்டு ஆட்டுப்பட்டிக்கு வந்து நரியை விரட்டி துரத்த ஆரம்பித்தனர்.
நன்கு உண்டு திமிர்த்த நரியும் விவசாயிகளிடம் பிடிபடாமல் ஓடியது.
விவசாயிகள் நரியை தேடி ஓடியதை அறிந்த ஓநாய் மீண்டும் ஆட்டுப்பட்டிக்குள் புகுந்து ஆடுகளை கொன்று தின்றது.
இந்த முறை தன் குட்டிகளையும் ஓநாய் தன்னுடன் அழைத்து வந்து குடும்பத்துடன் ஆடுகளை அடித்து தின்றது.
இதை கேள்விபட்ட விவசாயிகள் நரியை விட்டு ஓநாயையும் அதன் குட்டிகளையும் விரட்டத் தொடங்கினர்.
அந்த நேரத்தில் ஓய்விலிருந்த நரி தன் தோழியான குள்ள நரியையும் கூட்டி வந்து ஆட்டினை அடித்து சாப்பிட ஆரம்பித்தன.
இதே கதை தொடர்கதையாகி ஆடுகளையும் இழந்து, சாப்பிடவும் வழியில்லாமல் ஓய்வு உறக்கம் இன்றி தெம்பின்றி இருந்த விவசாயிகளை நன்கு தின்று கொழுத்த ஓநாய் தன் குட்டி, அதனுடைய வாரிசு குட்டிகள் என எல்லாம் சேர்ந்து ஆட்டுடன் சேர்த்து விவசாயிகளையும் கடித்துக் குதற ஆரம்பித்தன.
ஓநாய்களே ஆட்டை எடுத்துக் கொண்டால் நாம் என்ன செய்வது என யோசித்த நரி தந்திரமாக ஒரு காரியம் செய்தது.
விவசாயிகளிடம் தாமாக சென்று நான் திருந்தி விட்டேன், எல்லா தவறுக்கும் காரணமான என் தோழி குள்ள நரியையும் அவள் குடும்பத்தையும் துரத்தி விட்டேன், எனக்கு என யாருமே இல்லை, நான் இங்கு பட்டியிலேயே இருந்து உங்கள் ஆடுகளை நான் பார்த்துக் கொள்கிறேன், நீங்கள் போய் ஓநாயையும் அதன் குடும்பத்தையும் விரட்டி அடியுங்கள் என்றது.
இந்த நரியின் கபட நாடகத்தை உண்மை என நம்பிய விவசாயிகளும் அந்த ஓநாய் குடும்பத்தை தூரமாக துரத்தி விட்டு திரும்பி வந்து பார்த்தால் அந்த துரோகி நரி தனது தோழி அதன் குட்டிகள் என பெருங்கூட்டத்துடன் பட்டியிலுள்ள ஆடுகளை சாப்பிட்டுக் கொண்டிருப்பதை பார்த்து எதுவும் செய்ய தெம்பில்லாமல் அழத் தொடங்கினர் விவசாய மக்கள்.
இப்பொழுது மீண்டும் ஆட்டுப்பட்டியை கைப்பற்ற பசியோடு காத்திருக்கும் ஓநாய் குடும்பம் ஒரு பக்கம், உண்டு களைத்து ஓய்விலிருக்கும் நரியும்,அதன் தோழியும் மறு பக்கம்.
என்ன செய்வான் யதார்த்த விவசாயி!!.
மீண்டும் முட்டாள் தனமாக நரியையோ, ஓநாயையோ துரத்தப்போகிறானா?
அல்லது ஆட்டுப்பட்டிக்கு வீரமான நல்ல காவலனை வைக்க முயற்சி செய்யப் போகிறானா??? .
.
.
..
.
.
.
.
.
மே 19ல் பார்ப்போம்.👆🏻
பகிரவும்...
Comments