சாலைகளுக்குத் தெரியாது நீ சாதிக்கப் பிறந்தவன் என்று

நேரம் இருந்தால் வாசியுங்கள்...மனதை கலங்க செய்யும் வரிகள்
{எண்ணமும் எழுத்தும் எனதல்ல }!!
*************************************
சாலைகளுக்குத் தெரியாது
நீ சாதிக்கப் பிறந்தவன் என்று

விரைந்து செல்லும்
வாகனங்களுக்குத் தெரியுமா
நீ தான் எங்கள் வீட்டின்
விடியலென்று......

முந்திச்செல்லும்
முன்னோடிகளுக்குத் தெரியுமா நீ தான் எங்கள்
வீட்டின் முகவரி என்று.......

கடந்துச் செல்லும்
கனரக வாகனங்களுக்குத்
தெரியுமா நீ தான்
எங்கள் கண்மணி என்று.,.....

விடியலும்
விலாசமுமாய்
நம்பிக்கையும் எதிர்காலமுமாய்
நம்பியிருக்கிறோம்
உன்னை......

படிப்பும் பட்டமும்
கல்வியும் ஞானமும்
உன்னைக் காப்பாற்றிக்
கொள்வதற்குத்தான்
என்றறிவாயோ......

ஐந்து நிமிடங்கள்
காத்திருந்து அடுத்து வரும்
பேருந்திற்காக காத்திருக்க
முடியாத உனக்காக
நீ பிறந்த நாள் முதல்
இன்று வரை காப்பாற்றுவாயென்று
காத்திருக்கிறோம்

காலமெல்லாம்
உடனிருப்பேனென்று
கட்டியத்தாலி நினைவிருக்கிறதா
கண்ணாளா
காத்திருப்பேன் கடைசிவரை

விரல் பிடித்து நான் நடந்து
கரை தாண்டவும்,கடல் தாண்டவும் கற்றுக்கொண்ட உன் நிழல் நான் தந்தையே
விழித்திருப்பேன்
நீ வரும் வரை...,..

அலுவலகத்திற்குத்தானே
சென்றிருக்கிறாய்
அப்படியே திரும்பி வருவாயென்று
காத்திருக்கிறோம்

பள்ளிக்குத்தானே
சென்றிருக்கிறாய்
பத்திரமாகப் புத்தகப்பையுடன்
திரும்பி வருவாயென்று
தவமிருக்கிறோம்

உடையாமலும்
உரசாமலும்
கவனமுடன் திரும்பி வா
நீ செல்லும் பாதைகள்
உனக்கு வெறும்
பயணமாக இருக்கலாம்
காத்திருக்கும் எங்களுக்குத்தான்
தெரியும் காலனிடம்
போராடிக்கொண்டிருக்கிறாய்
என்று......

அம்மாவும்,அப்பாவும்
தம்பியும்,தங்கையும்
மனைவியும்,மகளும்
மகனுமென வாழக்கிடைத்த
இந்த வாழ்க்கையொரு
வரமென்று உணர்ந்து கொள்ளுங்கள்

தொங்கிச் செல்வதும்
துரத்திச்செல்வதும்
உங்கள் குருதியின்
வேகமாக இருக்கலாம்
ஆனால், எமனிடருந்து
எப்போதும் தப்பித்து விடமுடியாது

விவேகமுடன் செயல்படாவிட்டால்
வீட்டில் காத்திருக்கும்
உயிருக்கும் மேலான உங்கள்உறவுகளையெல்லாம்
அரசு மருத்துவமனையில் பிரேதபரிசோதனைக்காக
காத்திருக்க வைத்துவிடும் என்பதை அறிவீர்களோ,.........

{இனி திருத்திக்கொள்வதும் திருந்திக்கொள்வதும் உங்கள் கடமை}

அன்பு நண்பர்களே 👬 வாகனங்களில் அதிவேகமாகச் செல்லாதீர்கள்❌
பேருந்தின் படியில் தொங்கி பயனம் செய்யாதீர்கள்🚫

இனிய வாழ்க்கைப் பயனத்தில் ,  அதிவேக கோர சாலைப் பயனங்களைத் தவிர்ப்போம்.. 🕯🕯🕯

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth