வெளியூர் செல்லும் போது வீட்டைப் பாதுகாப்பது எப்படி?
வெளியூர் செல்லும் போது வீட்டைப் பாதுகாப்பது எப்படி?
🍉🍇🍍 வீட்டைப் பூட்டி விட்டு வெளியூர் செல்வதற்கு முன்பாக உங்கள் வீட்டின்
அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் நேரிலோ அல்லது 100 என்ற எண்ணிற்கோ
போன் செய்து உங்கள் வீட்டின் விலாசம் எத்தனை நாட்கள் வீட்டில் இருக்க
மாட்டீர்கள் எனும் விவரத்தைத் தெரிவித்தால் நீங்கள் ஊரில் இல்லாத நேரத்தில்
ஆல்பா , பீட்டா , பேட்ரோல் போலீஸார் பகல் இரவு வேளைகளில் உங்கள் வீட்டை
அடிக்கடி பார்வையிட்டு பாதுகாப்பு வழங்குவார்கள். உங்கள் வீட்டில் வெளி ஆட்கள்
நடமாட்டம் இருந்தால் விசாரிப்பார்கள்' மேலும் இரவு நேரங்களில் உங்கள் வீட்டில்
மின் விளக்கு எரிந்தால் உடனடியாக அங்கு சென்று விசாரணை மேற்கொள்வார்கள்'
🍉🍇🍊 நீங்கள் ஊருக்குப் போகும் விஷயத்தை வெளியில் நின்று பேச வேண்டாம்'
🍉🍇🍊 வெளியூர் செல்லும் போது நிறைய நகைகள் அணிந்து செல்வதை தவிர்க்க
வேண்டும்.
🍉🍇🍊 வீட்டில் பயன்படுத்தும் பூட்டுக்கள் தரமானதாக இருக்க வேண்டும். பாதுகாப்பு
விஷயத்தில் சிக்கனமாக இருக்கக் கூடாது.
🍉🍇🍊 பணத்தை ஒரே இடத்தில் வைக்காமல் ஒவ்வொரு பெட்டிகளிலோ, பைகளிலோ பிரித்து வைத்துக் கொள்வது நல்லது.
🍉🍇🍊 ஊருக்குச் செல்லும் போது அதிக நகை, பணத்தை வீட்டில் வைத்துச்
செல்லக் கூடாது. வங்கி லாக்கர் களில் வைத்து விட்டுச் செல்ல வேண்டும்.
🍉🍇🍊 இரவு நேரங்களில் உங்கள் வீட்டின் முன்புறம், பின்புறம் விளக்குகளை
உங்கள் பக்கத்து வீட்டுக்காரர்களை விட்டுப் போடச்சொல்லவும்.
🍉🍇🍊 வீட்டைப் பூட்டும் போது கிரில் கேட்டின் உட்புறமாகப் பூட்டவேண்டும்'
🍉🍇🍊 பேப்பர் போடுபவர், பால் போடுபவர்களிடம் முன்பே போட வேண்டாம்
என்று கூறிவிடுங்கள் -
🍉🍇🍊 வாசலில் பேப்பர் ' பால் போட்டும் எடுக்காமல் இருந்தால் அந்த வீட்டில் ஆள்
இல்லை என்பதை காட்டிக் கொடுத்து விடும் -
🍉🍇🍊 ஊருக்குச் செல்லும் போது வாசலில் சில துணிகளைக் காயவைத்து விட்டுச் செல்லுங்கள். அது ஆள் இருப்பது போல் காட்டும்.
🍉🍇🍊 வெளியூர் செல்லும் போது அக்கம் பக்கத்தினரிடம் வீட்டைப் பார்த்துக் கொள்ளும் படி சொல்லுங்கள்.
🍉🍇🍊 அவர்களின் தொலைபேசி எண்ணைத் தெரிந்து வைத்துக் கொண்டு தினம் ஒரு
முறை போன் செய்து விசாரித்துக் கொள்வது நல்லது. அதே நேரம் உங்கள் எண்ணையும் அவர்களிடம் கொடுத்து ஏதாவது பிரச்னை என்றால் போன் செய்யச் சொல்லுங்கள் -
🍉🍇🍊 வெளியூர் செல்லும் போது நிறைய நகைகள் அணிந்து செல்வதைத் தவிர்க்க வேண்டும் .
🍉🍇🍊 நீங்கள் வெளியூரில் இருந்து திரும்பி வந்தவுடன் போலீஸ் நிலையத்தில்
தகவல் தெரிவித துவடுங்கள்'
🍉🍇🍊 அக்கம் பக்கம் இருப்பவர்கள் எல்லாரும் ஒரே சமயத்தில் ஊருக்குப் போகாமல்
பேசி வைத்துக் கொண்டு ஒவ்வொரு குடும்பமாச் சென்று வருவது பாதுகாப்பானது.
🍉🍇🍊 பக்கத்து வீட்டில் ஆள் இல்லாத போது ஏதாவது சத்தம் கேட்டால் நமக்கென்ன
என்று இருக்காமல் போய் பார்ப்பது நல்லது. அப்போதுதான் உங்கள் வீட்டில் ஏதாவது
பிரச்சனை என்றால் அவர்கள் வருவார்கள்'
🍉🍇🍊 திருடர்கள் திடீரென்று வந்து திருட மாட்டார்கள். நிச்சயம் இரண்டு நாட்களாவது நோட்டம் பார்த்து விட்டுத்தான் திருட வருவார்கள்' அதனால் புதியதாக யாரையாவது உங்கள் ஏரியாவில் பார்த்தால் யார் என்ன என்று விசாரியுங்கள்.
_____________________________ ______________________________====
Comments