ஒரு கிராமத்தில் மூன்று பெண்கள்.
🌷🌷ஒரு கிராமத்தில் மூன்று பெண்கள். அவர்கள் பொதுக்கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துக்கொண்டிருந்தார்கள். அப்போது பள்ளிவிட்டு ஒரு சிறுவன் வந்து கொண்டிருந்தான். அவனைப் பார்த்து ஒரு பெண் கூறினாள். இதோ போகிறானே அவன் என் பையனாக்கும். மேரி மாதா ஆங்கிலவழிப் பள்ளியிலே படிக்கிறான். அப்போது வேறொரு பையன் வந்தான். அவனைப் பார்த்த இன்னொரு பெண் சொன்னாள். அதோ போறானே அவன் என் பையனாக்கும். செயின் ஜோசப் இங்க்லீஷ் மீடியத்திலெ படிக்கிறான்.
அப்போது மூன்றாவது பெண்ணினுடைய பையன் வந்தான். அந்தப் பெண்ணிடமிருந்து குடத்தை வாங்கி தலையில் வைத்துக்கொண்டு வாங்க அம்மா வீட்டுக்குப்போலாம் என்று சொன்னான். அவனைச் சுட்டிக்காட்டி இவன் என் பையனாக்கும். அரசுப் பள்ளியிலே தமிழ் மீடியத்திலெ படிக்கிறான்... என்றாள் அந்த மூன்றாவது பெண்.🌷🌷🌷🌷
Comments