அன்புடையீர், வணக்கம்.
தமிழ்நாட்டிலுள்ள உயர்கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள்/ மாணவர்கள் கணித்தமிழ் சார்ந்து ஆய்வுகளை முன்னெடுக்கும் வகையில் இணைப்பில் கண்டுள்ளவாறு கணித்தமிழ் கோடை முகாம்களை தமிழ் இணையக்கல்விக் கழகம் ஒருங்கிணைக்க உள்ளது. இம்முகாம்களில் கணித்தமிழ்ப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் மாணவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். ஆர்வமுள்ள ஆசிரியர்கள்/ மாணவர்கள்
1. தங்களின் பெயர்
2. அலைபேசி எண்
3. மின்னஞ்சல் முகவரி
4. கல்வி நிறுவன முகவரி
ஆகிய விவரங்களுடன் ஏப்ரல் 27, 2016க்குள் kanitamilperavai@gmail.com<mailto:kanitamilperavai@gmail.com> என்னும் மின்னஞ்சலில் பதிவு செய்துகொள்ள விழைகின்றேன். இயற்கை மொழிச்செயற்பாடுகள் (Natural Language Process) பயிலரங்கில் கலந்து கொள்ள விரும்பும் ஆசிரியர்கள் 19.04.2016க்குள் தங்கள் பெயரினைப் பதிவு கொள்ள விழைகின்றோம்.
கணித்தமிழ் கோடை முகாம் விவரங்கள்
எண்
முகாம் பொருண்மை
நாள்
முகாம் நிகழ்விடம்
பங்கேற்பாளர்
எண்ணிக்கை
1
இயற்கை மொழிச்செயற்பாடுகள்
(Natural Language Process)
2-8மே
2016
தமிழ் இணையக் கல்விக் கழகம்,சென்னை
கணிப்பொறியியல் ஆசிரியர்கள்
50 பேர்
2
குறுஞ்செயலி உருவாக்கம் (Mobile App development)
10-16மே2016
அழகப்பா பல்கலைக்கழகம்
கணிப்பொறியியல் ஆசிரியர்கள்
50 பேர்
3
குறுஞ்செயலி உருவாக்கம் (Mobile App development)
18-24மே2016
தமிழ் இணையக் கல்விக் கழகம்,சென்னை
கணிப்பொறியியல் மாணவர்கள்
50 பேர்
4
மின் உள்ளடக்க உருவாக்கம் (E Content creation )
02-08ஜூன்2016
தமிழ் இணையக் கல்விக் கழகம்,சென்னை
பல்துறை ஆசிரியர்கள்
50 பேர்
5
மின் உள்ளடக்க உருவாக்கம் (E Content creation )
10-16ஜூன்2016
தமிழ் இணையக் கல்விக் கழகம்,சென்னை
பல்துறை மாணவர்கள்
50 பேர்
இயக்குநருக்காக,
மா. தமிழ்ப்பரிதி
மாநில ஒருங்கிணைப்பாளர்
கணித்தமிழ்ப்பேரவை
7299397766
Comments