காகிதத்தின் மீது வேகமாக ஊதும் போது,
தினம் ஒரு சேதி
காகிதத்தின் மீது வேகமாக ஊதும் போது, காகிதத்தின் மேல் பகுதியில் காற்று அதன் கீழ் பகுதியை விட வேகமாக நகரும். இந்த வகையில் காற்றில் ஏற்படும் வேறுபாடு காகிதத்தை மேல்நோக்கி தூக்கச் செல்கிறது. அது போன்றே பறக்கும் பறவையின் மேல் பகுதி, அதன் கீழ் பகுதியை விட வேகமாக நகருகிறது. இந்தக் காற்றின் செயல்பாடே பறவையை மேல்நோக்கி உயரச் செய்து பறக்க வைக்கிறது.
பறப்பது என்பது கடினமான வேலை. எல்லா பறவைகளும் எல்லா நேரமும் சிறகுகளை அடிப்பதில்லை. சில பறவைகள் குறிப்பிட்ட இடைவெளியில் சிறகடிப்பதை நிறுத்தி சக்தியை சேமிக்கின்றன.
சில பறவைகள் ஒரே நேர்க்கோட்டில் பறக்கும். பறக்க உதவும் ஒவ்வொரு சிறகும் லட்சணக்கணக்கான நுண்ணிய இழைகளைக் கொண்டிருக்கும். இவை ஒன்றுக்கு ஒன்று சேர்ந்து சிறகிற்கு வடிவம் தருகிறது. கடுமையான காற்றடிப்பின் போதும் இவை தாக்குப் பிடிக்கும். 👑
Comments