எம் அன்பு உறவுகளுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
13-04-2016 புதன் கிழமை சப்தமி திதி, புனர்பூசம் நட்சத்திரம் சுகர்மம் நாமயோகம் வணிசை கரணம் சித்த யோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் இரவு 07-48 மணியளவில் துலாம் லக்கினத்தில் மங்களகரமான துர்முகி வருஷம் பிறக்கிறது.
60 வருடங்களில் மிக முக்கிய வருடமாக இந்த வருடம் வருகிறது. இது 30வது வருடமாகும்.
வருட ஆரம்பத்தில் ராஜ கிரகமான சூரியனுடைய வீடான சிம்மத்தில் சுபகாரகன் குரு இருப்பது இந்த வருடத்தில்தான்.
பிறக்கும் இனிய தமிழ் புத்தாண்டு
நம் அனைவரின் வாழ்விலும் அன்பையும் , மகிழ்ச்சியையும்
நோய் இல்லாத வாழ்வையும் குறைவில்லாத செல்வத்தையும்
கொடுக்கும் ஒரு புதிய புத்தாண்டாக மலர வாழ்த்துக்கள் !
சுக்ர யோகம் பொங்கட்டும்!
பிறக்கும் இவ்வருடம் புனிதமாய் புதுமைகளோடு எம் வாழ்க்கையில் சகல வெற்றிகளும் ஏற்பட்டு நல்ல வளங்கள் வாழ்க்கையில் உருவாகவும் வழி தரட்டும் !!!
"துர்முகிி" புத்தாண்டே வருக வருக, துன்பங்கள் நீங்கி இன்பம் பொங்க வரம் தருக...
வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து என்
உளமே புகுந்தவதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனி பாம்பிரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே!
Comments