ஒரு முறை நாரத மஹரிஷிக்கு ஒரு சந்தேகம் எழுந்தது.
"கோவிந்தா கோவிந்தா கோவிந்தா"
"நாராயண ஹரி நாராயணா"
ஒரு முறை நாரத மஹரிஷிக்கு ஒரு சந்தேகம் எழுந்தது.
நாராயண நாமஸ்மரணத்தினால் என்ன பிரயோஜனம்?
உடனே நாரத மஹரிஷி வைகுண்டத்திற்கு சென்று தன் சந்தேகத்தை ஸ்ரீமந்நாராயணன் முன் வைத்தார்.
பகவான் நாரத மஹரிஷியிடம் இவ்வாறு கூறினார்.
”நாரதா, இப்போது பூலோகத்தில் நைமிசாரண்யத்தில் ஒரு பூச்சி பிறந்துள்ளது. அதனிடம் போய் கேள்” என்று அந்த பூச்சியை காண்பித்தார்.
பகவானின் ஆணையின்படி நாரத மஹரிஷி அந்த பூச்சியிடம் சென்று, “நாராயணன் நாமஸ்மரணத்தினால் என்ன பிரயோஜனம்? என்று கேட்டார்.
உடனே அந்த பூச்சி துடிதுடித்து இறந்து போனது.
விசாரத்துடன் நாரத மஹரிஷி திரும்ப வைகுண்டம் சென்று நடந்ததையெல்லாம் ஸ்ரீமந்நாராயணனிடம் வினவினார்.
”ஓஹோ! அப்படியா! நீ மறுபடியும் பூலோகம் சென்று கஸ்யபரின் ஆசிரமத்திலுள்ள காராம்பசுவிற்கு பிறந்த கன்றுகுட்டியிடம் போய் கேள்” என்று ஆணையிட்டார்.
நாரத மஹரிஷி கஸ்யபரின் ஆசிரமத்திலுள்ள கன்றுகுட்டியிடம் சென்று அதே கேள்வியை கேட்டார்.
அந்த கேள்வியை கேட்ட மாத்திரத்தில் அந்த கன்றுகுட்டி துடிதுடித்து இறந்து போனது.
நாரத மஹரிஷி மிகவும் ஆச்சரியத்துடன் வைகுண்டம் சென்று ஸ்ரீமந் நாராயண்னிடம் நடந்ததை கூறினார்.
ஸ்ரீமந் நாராயணன், “நாரதா! இப்பொழுதுதான் காசி ராஜனுக்கு ஒரு புத்திரன் ஜன்மித்துள்ளான். அந்த சிசுவிடம் சென்று உன் கேள்வியை கேள்” என்று கூறினார்.
அப்பொழுது நாரத மஹரிஷி, “பிரபு, என் மூலமாக ஒரு பூச்சியும், கன்றுகுட்டியும் இறந்து விட்டன.
இப்பொழுது சிசுஹத்யாபாதகமும் (குழந்தையை கொன்ற பாபமும்) என்னை வந்து சேரும் என்று ஸ்ரீமந்நாராயணனிடம் கவலையுடன் கூறினார்.
அதற்கு ஸ்ரீமந் நாராயணன், “நாரதா, உனக்கு எந்த பாபமும் வராது. அந்த சிசுவிடம் சென்று உன் சந்தேகத்தை கேட்டு தெரிந்து கொள்” என்று அபயமளிக்கிறார்.
ஸ்ரீமந்நாராயணனின் உத்தரவுக்கேற்ப நாரத மஹரிஷி அந்த காசி ராஜனுக்கு பிறந்த சிசுவிடம் சென்று தன் சந்தேகத்தை தீர்க்கும்படி கேட்கிறார்.
அப்பொழுது அந்த குழந்தை கலகலவென்று சிரித்த்படி, “ஓ மஹரிஷி, நான் அநேக ஜன்மங்களின் பாபங்களின் பலனாக நீச்சமான (கேவலமான) பூச்சியாக பிறப்பெடுத்தேன்.
அந்த ஜன்மாவில் நீங்கள் வந்து என் செவிகளில் ‘நாராயணா’ என்ற நாமத்தை உறைத்தீர்கள்.
அந்த பரம பவித்ரமான நாமம் என் செவிகளுக்குள் நுழைந்தவுடனேயே, என்னுடைய ஜன்ம ஜன்மாக்களின் பாபம் நசித்து பவித்ரமான கோஜன்மா கிடைத்தது.
அந்த ஜன்மாவில் கூட நீங்கள் வந்து மறுபடியும் என் செவியில் அந்த பவித்ரமான ‘நாராயணா’ நாமத்தை புகுத்தினீர்கள்.
அந்த க்ஷணமே அந்த புண்ணிய பலிதத்தின் காரணமாக இந்த காசி ராஜனுக்கு குமாரனாக ஜன்மமெடுத்தேன்.
இதைவிட ‘நாராயண” நாம ஸ்மரணத்தின் மகத்துவத்தை என்னவென்று கூறுவது மஹரிஷி...?"
என்று கூறி அந்த சிசு தன்னுடைய நர ஜன்ம அனுபவத்துக்குள் சென்றுவிட்டது.
நாரத மஹரிஷி பரமானந்தத்துடன் ஸ்ரீமந்நாராயணனை உளமாற ஸ்துதி செய்து தன் ஆசிரமத்திற்கு சந்தோஷமாக சென்றார்.
"நாராயணா ஹரி நாராயணா"
"ஸ்ரீ மன் நாராயணா உன் திருவடிகளே சரணம்"
Comments