ஒரு நாய்க்கு ஒரு எலும்பு

ஒரு நாய்க்கு ஒரு எலும்பு கிடைத்தது. அந்த நாய் எலும்பு துண்டை கடித்து பார்த்தது. எலும்பு பழசு என்பதால் கல்லு மாதிரி இருந்தது. அதுல இருந்து எதுவும் வரவில்லை.

இருந்தும் அந்த நாய் அத விடாம கடித்துக் கொண்டே இருந்தது. அதனால் வாயில் காயம் ஏற்பட்டு ரத்தம் வர ஆரம்பித்தது. அந்த நாய்க்கு அது தன்னோட ரத்தம் தான் என்று தெரியவில்லை. ரத்தம் ரொம்ப சுவையாக இருக்கிறதே, நம்ம ரொம்ப சிரமப்பட்டு கடித்ததினால் தான் இதுல இருந்து ரத்தம் வருவதாக நினைத்தது...
அதை மேலும் மேலும் கடித்துக் கொண்டே இருந்தது. அதனால் வாயில் காயம் பெரிதாகி ரத்தம் அதிகமாக வர ஆரம்பித்தது. நாயோ ஆஹா எவ்வளவு ரத்தம் எவ்வளவு சுவை என்று பெருமைபட்டுக் கொண்டது.

தன்னுடைய ரத்தம் தான் என்று தெரியாமால் மீண்டும் மீண்டும் சுவைக்க ஆரம்பித்தது... இப்படியே நிறைய ரத்தம் வெளியேறியதால் ஒருநாள் நாய் செத்து போச்சு...

நாமும் இப்படிதான் இலவசங்கள் எங்கிருந்து வருகிறது என்று தெரியாமலேயே நம்ம ரத்தத்தை நாமே சுவைத்துக் கொண்டு இருக்கிறோம்...

அரசால் வழங்கப்படும் அனைத்து இலவசங்களும் நாம் ஒவ்வொருவரும் செலுத்தக்கூடிய வரிகளாகிய Professional Tax, Sales Tax, Central Sales Tax, Custom Duty, Income Tax, Dividend Distribution Tax, Excise Duty , Municipal & Fire Tax, Staff Professional Tax, Cash Handling Tax, Food & Entertainment Tax, Gift Tax, Wealth Tax, Stamp Duty & Registration Fee, Interest & Penalty, Road Tax, Toll Tax , Vat & etc போன்றவற்றின் மூலமாக கிடைக்கும் பணமே. அதாவது ஒருவர் பயன்பெற மற்றொருவர் தோளில் சுமக்கும் நிலை.

“பசியோடு இருப்பவனுக்கு ஒரு மீனைக் கொடுப்பதற்கு பதிலாக மீன் பிடிக்கக் கற்றுக்கொடுப்பதே சிறந்தது” THINK TWICE BEFORE VOTE 😊

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth