எல்லோருடைய வாழ்வில் நடந்த பசுமையான நினைவுகள்:

எல்லோருடைய வாழ்வில் நடந்த பசுமையான நினைவுகள்:

💝வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும் ஊரே அமர்ந்து பார்த்தோம்.

💝சனிக்கிழமை மாநிலமொழி திரைப்படம் தமிழில் போடமாட்டார்களா என ஏங்கி கிடந்தோம்.

💝திங்கள்கிழமை பள்ளியில் அமர்ந்து கொண்டு ஞாயிறன்று பார்த்த படத்தைப்பற்றி விவாதம் செய்தோம்.

💝தாத்தவையும் பாட்டியையும் ஸ்கூல் லீவு போட அடிக்கடி சாகடித்தோம்.

💝பெரிய மழை வந்தால் ஸ்கூல் லீவு என சந்தோஷப்பvட்டுக் கொண்டோம்.

💝முழு ஆண்டு விடுமுறையில் மாமா பெரியப்பா பாட்டி வீட்டுக்கு டூர் போனோம்.

💝ஒரே ஒரு ரூபாயைக் கையில் வைத்துக்கொண்டு அன்று முளுவதும் செலவு செய்தோம்.

💝100ரூபாய் நோட்டை ஆச்சரியத்துடன் கையில் வாங்கி பெருமூச்சு விட்டோம்.

💝அனைவர் வீட்டிலும் உண்டியல் இருந்தது.

💝பக்கத்து வீட்டு ஜன்னல் வழியாக நின்றுகொண்டே படம் முளுவதையும் பார்த்து ரசித்தோம்.

💝பீரோக்கள் முளுவதும் சக்திமான் ஸ்டிக்கர்களை ஒட்டி வைத்து அழகு பார்த்தோம்.

💝ஹார்லிக்ஸ் பாட்டில்களில் மீன்களை வளர்த்தோம்.

💝பொங்கலுக்கும் தீபாவளிக்கும் கிரிட்டிங் கார்டு வாங்க குவிந்து நின்று தேர்வு செய்தோம்.

💝10வது 12வது ரிசல்ட் பார்க்க தினந்தந்தி வாசலில் தவம் கிடந்தோம்.

💝15வயதுவரை டவுசர்களையே அணிந்திருந்தோம்.

💝பழைய மாடல் கேசட்களில் பிலிம் சிக்கிக்கொண்டால் ரெனால்ஸ் பேனாவால் உள்ளே விட்டு சுத்தி சுத்தி அட்ஜஸ்ட் செய்தோம்.

💝கன்னிப்பெண்கள் அனைவருமே நதியா மாடல் சடை போட்டு அழகுபார்த்தார்கள்.

💝பணக்கார வீட்டு கன்னிப்பெண்கள் BSA SLR சைக்கிளில் பேஷனாக வலம் வந்தார்கள்.

💝ஜாமென்ட்ரி பாக்ஸில் காசுகளையும் மிட்டாய்களையும் போட்டு வைத்தோம்.

💝நம் ஊரில் TVS-50 & Bullet வைத்திருந்தவர்கள் பணக்காரர்களாக இருந்தார்கள்.

💝கட்டான கரண்ட் மீண்டும் வந்ததும் மகிழ்ச்சியில் கத்தி ஆராவரப்படுத்தினோம்.

மலரும் நினைவுகள்!!!

பகிரலாமே!!!

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth