.நட்சத்திர கிரிக்கெட்
அன்புள்ள
பெரியோர்களே
தாய்மார்களே
வரும் ஏப்ரல் 17ல் சென்னையில்
கமல்
ரஜினி
விஜய்
விக்ரம்
விஷால்
போன்ற 5 கோடி முதல் 50 கோடி
வரை மட்டுமே
கஷ்டப்பட்டு
உழைத்து
நடித்து
கூலி வாங்கி
அடுத்த வேலை உணவிற்கே
வழியில்லாமல்
அல்லாடும்
கஷ்ட ஜீவனத்தில்
வாழும் ஆதரவற்ற
கூலித்தொழிலாளிகளுக்கு
தற்போது ஒதுங்க நிழல் இன்றி
கொளுத்தும் வெய்யிலில் வாடும்
திக்கற்ற கலைஞர்களுக்கு
சங்கக் கட்டிடம் கட்ட
நிதி திரட்ட நடத்தப்படும் கிரிக்கெட்டை
கண்டு நிதியளிக்க
மாதம் 6 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை சம்பாதித்து
சென்னை மாநகர புஷ் பேக்
தகர
நரக
ரக ரக
பேருந்துகளில்
வலம் வந்து
வளம் நொந்து
மனம் வெந்து
சொகுசு வாழ்க்கை வாழும்
தமிழ்க்குடி மகன்களை
இளிச்ச வாயர்களை
டாஸ்மாக் நேயர்களை
பிறந்த குழந்தையை
பாலுக்கு அழ விட்டு விட்டு
பண்பாட்டு துரோகிகளுக்கு
பாலாபிஷேகம் செய்யும்
பண்ணாடைகளை
நம்பிக்கையோடு அழைக்கிறோம்.
வாருங்கள்
வந்து எங்கள்
பண்பட்ட விளையாட்டை
பணம் கொடுத்து பாருங்கள்
மனைவி மக்களை மறந்து
கூக்குரல் எழுப்பி
எம்மை உற்சாகப்படுத்த வாருங்கள்
300 ரூபாய் சம்பளம் வாங்கும் ரசிகனிடம் காசுபறிக்க பார்க்கும் நடிகர் சங்கம் 30 கோடி சம்பளம் வாங்கும் நடிகனிடம் பணம் கேட்க மறுப்பது ஏன் ?
.
விட்டால் இவர்கள் வீட்டு மளிகை சாமான்கள் வாங்குவதற்கு கூட ரசிகனிடம் பணம் கேட்பார்கள் போல ..
.
இதை புரிந்து கொண்ட நடிகர் அஜித் மக்களிடம் பணம் பறிக்காதீங்க சகநடிகர்களிடம் பணம் கேட்டு நடிகர் சங்க கடனை அடையுங்கள் கட்டிடம் கட்டுங்கள் .... தினமும் தன் குடும்ப செலவுக்காக சம்பாதிக்கும் மக்களிடம் பணம் பறிப்பது முட்டாள் தனம் என்று தான் நடிகர் சங்கம் நடத்தும் கிரிக்கட் போட்டியை புறக்கனிக்கின்றார் ..
.
ஒரு நடிகரே நமக்காக நடிகர் சங்கத்தை புறக்கனிக்க மக்களாகிய நாம் ஏன் அந்த கொள்ளையை புறக்கனிக்க கூடாது ..
ஆம் யாரும் நேரில் சென்று அந்த கிரிக்கெட் போட்டியை காணவேன்டாம் ரஜினி கமல்ஹாசன் விஜய் சூர்யா விக்ரம் சிம்பு தனுஷ் இவர்களிடம் இல்லாத பணமா நம்மிடம் இருக்கின்றது ??.
.
இதை இப்பவே தடுத்தால்தான் அவர்கள் அடுத்து கக்கூஸ் கட்டவதெற்காலாம் நம்மை நாட மாட்டார்கள் .. 100 ரூபாய் கொடுத்து படம் தான் பார்க்க முடியும் ரசிகனால் ...
.
சென்னை கடலூர் வெள்ளத்தில் மூழ்கிய போது இந்த நடிகர் சங்கம் என்ன செய்தது ??
.
சிந்தியுங்கள் இந்த கருத்து பிடித்திருந்தால் ஷேர் செய்யுங்கள் ..
Comments