நான் அந்த விமானத்தில் ஏறி என் இருக்கையைத் தேடி

🛫படித்ததில் பிடித்தது🛬
நான் அந்த விமானத்தில் ஏறி என் இருக்கையைத் தேடி அமர்ந்தேன்..
விமானம் புறப்படும் சற்று நிமிடம் முன்பு ஒரு பதினைந்து இராணுவ வீரர்கள் வந்து என் இருக்கையை சுற்றி அமர்ந்தார்கள்.. நான் அவர்களுடன் பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தேன்..
எந்த எல்லைக்கு பணி நிமித்தமாக செல்கிறீர்கள்..?
ஆக்ராவுக்கு ..அங்கு இரண்டு வாரம் பயிற்சி, அதன் பின்பு எல்லையில் பாதுகாப்பு பணி ...
ஒரு மணி நேரம் சென்றிருக்கும்.. அப்பொழுது ஒரு அறிவிப்பு.. மதிய உணவு தயார்..
சரி உணவு வாங்கலாம் என்று நான் என் பர்ஸை எடுக்க...பின்னால் ராணுவ வீரர்களின் பேச்சை கேட்டேன்..
நீ சாப்பாடு வாங்கலையா?
இல்லை ..விலை அதிகம்..என்னால் அவ்வளவு காசு செலவழிக்க முடியாது.. மூன்று மணி நேரம் போனால் டெல்லி..அங்கு இறங்கி உண்ணலாம் ..விலை குறைவு..
ஆமாம்..உண்மை..
இதை கேட்ட பொழுது.... மனம் வலித்தது..
விமானத்தின் பின்புறம் உணவுடன் நின்றிருந்த அந்த விமான பணிப்பெண்ணிடம் சென்று, பதினைந்து உணவுக்கான காசை கொடுத்து, அவர்களுக்கு உணவு கொடுக்க சொன்னேன்..
அந்த பணிப்பெண் என் கைகளை பிடித்தாள்.. கண்களில் கண்ணீர்.. இது கார்க்கிலில் இருக்கும் என் சகோதரனுக்கும் சேர்த்து என்றாள்..
நான் உண்டு முடித்து, கை கழவ சென்றேன்.. அப்பொழுது ஒரு முதியவர் என்னை நிறுத்தி, நீங்கள் செய்தததை நான் பார்த்தேன்.. இந்தாருங்கள்..என் பங்கு ரூபாய் 500 என்று என்னிடம் கொடுத்தார்..
நான் என் இருக்கைக்கு திரும்பினேன்..
சற்று நேரத்தில் விமான கேப்டன் என்னிடம் வந்து , என் கைகளை பிடித்து குலுக்கி, நான் முன்பு ஏர் போர்ஸ் பைலட்டாக இருந்தேன்..ஒரு நாள் எனக்கும் ஒருவர் உணவு வாங்கி கொடுத்தார். இது ஒரு கருணை செயல்..
மிக்க சந்தோஷம்.. உங்களை போன்றவர்களை தாங்கி இந்த விமானம் பயணிப்பது..என்று சொல்லி சென்றார்.
ஒரே கைதட்டல் விமானத்துக்குள் விண்ணுக்கு எட்டும் வரை..
முன்னால் இருந்த ஒரு 18 வயது இளைஞன் என்னிடம் கை குலுக்கி, என் கைக்குள் ரூபாயை திணித்தான்..
விமானம் வந்து நின்றது..நான் இறங்கினேன்.. இறங்கும் பொழுது ஒருவர் என் சட்டை பையில் சில நோட்டுக்கற்றைகளை திணித்தார்...
இறங்கி நடந்தேன்.. அந்த வீரர்கள் ஒரு குழுவாக அவர்களை ஏற்றிச்செல்லும் இராணுவ வண்டிக்காக காத்திருந்தார்கள்..
அவர்கள் அருகில் சென்றேன்.. நான் செலவழித்த பணத்தை விட, இப்பொழுது என்னிடம் அதிக பணம்..
ஒரு தூண்டுதல்..பலரின் வேண்டுதலை நிறைவேற்றியது போல்..
அனைத்து பணத்தையும் அவர்களிடம் கொடுத்தேன்.. போகும் வழியில் நன்றாக சாப்படுங்கள்.. கடவுள் உங்கள் எல்லாருக்கும் துணை இருக்கட்டும்..
காரில் ஏறி அமர்ந்தேன்.. ஒரு ஆத்ம திருப்தி..
இவர்கள் எல்லைகளை பாதுகாத்துக்கொண்டு.. உயிரினை துச்சமாக மதித்து எப்படி நம்மை காக்கிறார்கள்.. இவர்களுக்கு நான் கொடுத்தது ஒன்றுமில்லை...இதை புரியாத ஒரு பெரும் கூட்டம் இன்னமும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.
வெறும் பொழுது போக்கு அம்சங்களை தரும் சினிமா நடிகர் நடிகைகளை மிகவும் போற்றி கொண்டாடி, கோடி கணக்கில் பணம் சொத்து சம்பாதிக்கச் செய்யும் சமூகம், ஓட்டு போட்ட மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகள் மற்றும் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை கோடி கணக்கில் பணம் சொத்து சம்பாதிக்கச் செய்யும் சமூகம், இந்த இராணுவ வீரர்களை நினைத்துக்கூட பார்ப்பதில்லை என்ற வேதனை என்னை தாக்கியது....

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth