கண்ணா உன்னை துதிக்க எனக்கு தெரியாது.
உன்னை அர்சிக்க தெரியாது.. உன்னை வேதமந்திரத்தால் ஓதத் தெரியாது..
ஆழ்வார்களைப் போல் பாசுரங்களால் உன்னை பாடத்தெரியாது.. ஆச்சார்யன்கள் போல்
உன்னை ஆச்சரியக்க தெரியாது..
ஒன்று மட்டுமே தெரியும் கண்ணா. உன் திருவடியை பற்றிக் கொண்டு கண்ணா
என் உன்னிக்குட்டா என்று உன்னை அழைக்கத் தெரியும்..
உனக்குப் பிடித்த வெண்ணையை உனக்கு ஊட்டிவிடத் தெரியும்.. உன்னை தாலாட்டி தூங்கவைக்கத் தெரியும்...
உன்னிக்குட்டா சங்கு சக்கரரேகைகள் பதிந்த உன்
திருவடியை மெல்லப்பற்றி உன் பாத அழகை ரசிக்கத் தெரியும்.. கண்ணா என்றும் உன் பாதத்தை என் கைகளால் தாங்கி என் தலையில்
வைத்து கண்களில் ஒற்றிக் கொள்ளும்
பாக்கயம் போதுமடா... என் உன்னிக் குட்டா...
Comments